குஷ்புவை கண்ட இடத்தில் தடவிய தொண்டர்... பிரசாரத்தில் நடந்த அதிபயங்கர சம்பவம்

பிரச்சார கூட்டத்தில் நெரிசலை பயன்படுத்தி குஷ்புவை தவறாக கண்ட இடத்தில் தடவிய தொண்டரை, கன்னத்தில் பளார், பளார் என நடிகை குஷ்பு அடித்த சம்பவம் பிரசாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வீடியோ வெளியாக வைரலாகி வருகிறது.

khushsundar slapped a man who tried to misbehave with her while campaigning

பிரச்சார கூட்டத்தில் நெரிசலை பயன்படுத்தி குஷ்புவை தவறாக கண்ட இடத்தில் தடவிய தொண்டரை, கன்னத்தில் பளார், பளார் என நடிகை குஷ்பு அடித்த சம்பவம் பிரசாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வீடியோ வெளியாக வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். குஷ்புவின் பேச்சைக் கேட்க ஏராளமானோர் கூடுகின்றனர்.

கர்நாடகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் -ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேசிய தலைவர்கள், திரைப் பிரபலங்களின் பிரச்சாரம் என கர்நாடகா மாநிலத்தில் தேர்தல்களம் களைகட்டி உள்ளது. இந்நிலையில்,மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் குஷ்பு, திறந்த வாகனத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். 

அப்போது, குஷ்புவை பார்க்க பழைய ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கூடினர். அந்த தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர், ஹொய்சலா நகரில் குஷ்பு காங்கிரஸ் தொண்டர்களுடன் பேரணியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  சுமார் அரைமணி நேரம் பிரசாரம் செய்துவிட்டு, காரை நோக்கிச் சென்ற நடிகை குஷ்புவை பின்தொடர்ந்து ஏராளமானோர் ஓடிவந்தனர். அப்போது ஒருவர், குஷ்புவை தவறான முறையில் தட்டினார். உடனே கொந்தளிப்புடன் பின்னால் திரும்பிய குஷ்பு, தவறாக தடவிய அந்த நபரை கன்னத்தில் பளார், பளார் சந்தித்தார். 

இதை அருகில் இருந்த பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பயங்கர கோஷத்தோடு சத்தம் எழுப்பி கொண்டிருந்த தொண்டர்கள், குஷ்புவிடம் பளார் பளார் என அடிவாங்கிய நபரை, போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் நடிகை குஷ்பு அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios