ஒரே ஒரு போட்டோ... 6 தொகுதி, 1 லட்சம் ஒட்டு, அசால்ட்டா அள்ளும் ஏ.சி.சண்முகம்!! அல்லு விட்ட கதிர் ஆனந்த்....
கடந்த சில தினங்களாக நடந்த ஐடி ரெய்டில் பல்க்காக பலகோடியை பறிகொடுத்த பீதியில் இருக்கும் கதிர் ஆனந்துக்கு, ரஜினிகாந்த் ஏசி சண்முகம் சந்திப்பு போட்டோ அள்ளுவிட வைத்துள்ளது.
கடந்த சில தினங்களாக நடந்த ஐடி ரெய்டில் பல்க்காக பலகோடியை பறிகொடுத்த பீதியில் இருக்கும் கதிர் ஆனந்துக்கு, ரஜினிகாந்த் ஏசி சண்முகம் சந்திப்பு போட்டோ அள்ளுவிட வைத்துள்ளது.
நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் கடைசி கட்டத்தில் இருக்கின்றனர். திமுக அதிமுக என்ற பலம் பொருந்திய இரு கட்சிகளும் தங்களை மேலும் வலுவாக்கிக்கொள்ள வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய 3,4 சதவிகித வாக்கு வங்கிகளை வைத்திருக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
வேலூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகம் இந்தமுறை அதே வேலூர் தொகுதியை கேட்டு வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல சுயேச்சை சின்னத்தில் நின்று ரிஸ்க் எடுக்க விரும்பாத அவர் இரட்டையிலை சின்னத்தில் நிற்கிறார். திமுகவை பொறுத்தவரை துரைமுருகனின் மகன் கதிரானந்த் இதே தொகுதியில் நிற்கிறார்.
கடந்த முறை பிஜேபி கூட்டணியில் இந்த தொகுதியில் களம் கண்ட A.C. சண்முகம் 324326 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார். சுமார் 50 கோடிக்கு மேல் பணத்தை வாரி இறைத்து அதிமுக வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே இவர் இங்கு தோல்வியை தழுவினார். அப்போது பிஜேபி கூட்டணியில் பெரிய கட்சி என்று கூறுவதாக இருந்தால் பாமக மட்டுமே என சொல்லலாம். அவர்களுக்கு இங்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது.
இம்முறை அதிமுக, பாமக, பிஜேபி எல்லாம் ஓரணியில் இருப்பது ஒரு பலமாக இருந்தாலும், இரட்டை இல்லை சின்னம், ரஜினியின் மறைமுக ஆதரவு, ஏற்கனவே பார்த்து வைத்த வேலை அதாவது 50 கோடி ரூபாய் வரை செலவு செய்திருந்தது. இது போக பாமக வாக்கு வங்கியை பலமாக வைத்திருக்கும் தொகுதிகளில் ஒன்றாக இது இருப்பதால் வெற்றி உறுதியென சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தனது நண்பரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். தற்போது வாக்குப்பதிவிற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் ரஜினி ஏசி சண்முகத்தின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே சொல்லப்படுகிறது. ஏனென்றால் ரஜினி மக்கள் மன்றத்தின் வாக்கு வங்கி, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஒட்டு அப்படியே ஏசி சண்முகத்திற்க்கே விழும் என்பது சந்தேகமே இல்லை.
ஏற்கனவே மறைமுகமாக தனது நண்பர் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக உள்ள நிலையில், தற்போது இந்த சந்திப்பு அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ரெய்டு வந்ததில் பல்க்காக பலகோடியை பறிகொடுத்த மனவுளைச்சலில் இருக்கும் கதிர்ஆனந்துக்கு, ரஜினி ஏசி சண்முகம் சந்திப்பு போட்டோ அள்ளுவிட வைத்துள்ளது.