அசால்ட்டா முந்தும் திமுக, அதல பாதாளத்தில் அதிமுக... இழுபறியில் எத்தனை? ஜூ.வி நடத்திய சர்வேயில் வெளியான ஷாக்!!
முன்னணி வார இதழான ஜூவி நடத்திய கருத்துக்கணிப்பில் பல சுவாரஷ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னணி வார இதழான ஜூவி நடத்திய கருத்துக்கணிப்பில் பல சுவாரஷ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிரடியான சர்வேயில் பொதுவாக பெருவாரியான தமிழக மக்களின் மனநிலை இப்போது திமுக கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கிறது. அதிமுக வாக்கு வங்கியில், சரிவு ஏற்பட்டுள்ளது சர்வே முடிவுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. நடக்கபவுள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல்லில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில், 17 தொகுதிகளில் தி.மு.க-தான் முந்திச்செல்கிறது.
அடுத்ததாக 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலுமே, அதிமுகவுக்கு எதிரான நிலைதான் உள்ளது. அதிமுகவுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ள தொகுதிகளில் அதிமுக வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு அல்லது பலமில்லாத எதிரணி வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பது போன்றவைதான் காரணமாக இருக்கின்றன. மோடி அரசுமீதான அதிருப்தி மற்றும் தினகரனின் அமமுக செய்துவரும் களப்பணி ஆகியவை மக்கள் மத்தியில் அதிமுக-வுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகம் முழுக்கத் தினமும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருந்தன.
தேர்தலுக்கு இன்னும் பத்தே நாட்கள் இருக்கின்றன. ஆனால் தற்போதைய நிலவரப்படி, முப்பது தொகுதிகள் திமுக வசம் வரக்கூடும். ஏழு தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடும். மூன்று தொகுதிகள் இழுபறி நிலையில் உள்ளன.
கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பல இடங்களில் திமுக கூட்டணிக்குள் ஒத்துழைப்பு இல்லை என்பது தெள்ளது தெளிவாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டுக்கு சொல்லனும்னா கள்ளக்குறிச்சி தொகுதியில் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுவதால், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக ரவிக்குமாரை டீலில் விட்டுவிட்டு சென்ற பொன்முடியால் ரவிக்குமார் நொந்துவிட்டாராம்.
திமுக அதன் கூட்டணி கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க, அதிமுகவோ நடக்கவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில்தான் முழுக் கவனத்தையும் செலுத்துகிறது. ஆனாலும், ஒரு சில நாடாளுமன்றத் தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெறும்.
பல தொகுதிகளில், அதிமுக-வுக்கு நல்ல குடைச்சலைக் கொடுக்கிறது அமமுக கிருஷ்ணகிரியில் முனுசாமிக்கு வெற்றி வாய்ப்பிருந்தாலும், அங்கு, முனுசாமிக்கு செம்ம ஆப்படிக்க இருப்பது அமமுக கணேசகுமார் தான். அதேபோல, தேனியில் ஓபிஎஸ் மகனுக்கு செம்ம டஃப் பைட் கொடுப்பது ஆண்டிபட்டி தங்கம் தான், அந்த பகுதியில் தங்கதமிழ்ச்செல்வனுக்குச் செல்வாக்கு உள்ளதால், ஓபிஎஸ் கூடாரம் கதிகலங்கியுள்ளதாம். ஆனால், தேர்தலுக்கு முன்பாக கரன்சி, அதிரிபுதிரி பிரசாரம், உள்குத்து வேலைகள் போன்றவை கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.