Asianet News TamilAsianet News Tamil

ஓடி ஓடி ஆள்சேர்த்த சந்திரபாபு நாயுடு அவுட்... ஆந்திர முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி..!

ஆந்திராவில் 145 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் மோடிக்கு எதிராக ஓடி ஓடி உழைத்த சந்திரபாபு நாயுடு படுதோல்வி அடைந்துள்ளார்.

Jagan Reddy led YSRCP
Author
Andra Pradesh, First Published May 23, 2019, 12:13 PM IST

ஆந்திராவில் 145 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் மோடிக்கு எதிராக ஓடி ஓடி உழைத்த சந்திரபாபு நாயுடு படுதோல்வி அடைந்துள்ளார். Jagan Reddy led YSRCP

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியது. Jagan Reddy led YSRCP

இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 130 முதல் 135 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தெலுங்குதேசம் கட்சி 37 முதல் 40 இடங்களிலே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.Jagan Reddy led YSRCP

இந்நிலையில், ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும், மக்களவை தொகுதியில் 23 இடங்களிலும் முன்னிலை பெற்று முதல் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகிறார். அதேபோல் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து மாநில தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios