தி.மு.க தமிழகத்தில் லோக்சபா மற்றும் மினிசட்டமன்ற தொகுதியில் முன்னிலை வகித்தாலும் கனிமொழி பொறுப்பாளராக இருந்த விளாத்திகுளத்தில் அ.தி.மு.க முன்னிலையில் இருப்பது கழக உடன்பிறப்புகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. 

தி.மு.க மகளிர் அணி தலைவர் கனிமொழி இம்முறை ராஜ்யசபா பதவிக்கு ஆசைப்படாமல் தூத்துகுடியில் களம் இறங்கி போட்டியிட்டார். அவர் போட்டியிடும் போதே அவரின் வெற்றி உறுதியானதாக சொல்லப்பட்ட து. ஆனாலும் பிரசாரத்தில் தீவிரப்படுத்தி வெற்றிக்காக உழைத்தார். தூத்துகுடியில் தி.மு.க வேட்பாளராக இருக்கும் கனிமொழிக்கு விளாத்திகுளத்தை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு தலைமையால் தரப்பட்டது. 

இதனால் இடைத்தேர்தலில் நடக்கும் ஒரு தொகுதியான விளாத்திகுளம் தி.மு.க வசமாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை போய் கொண்டிருக்கும் இந்நிலையில் தி.மு.க விளாத்திகுளத்தில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதை பார்த்த கனிமொழி  “ஏன் இப்படி ஆச்சு” என தூத்துகுடியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் கழக நிர்வாகிகளிடம் கேட்டு வருவதோடு ஓட்டு எண்ணும் இடத்தில் கவனமாக இருங்கள் என சொல்லி இருக்கிறாராம்.