தி.மு.கவின் தர்மபுரி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் தி.மு.கவிலிருந்து  நீக்கப்பட்டு, தேமுதிகவுக்கு போய், அங்கும் போனியாகாமல் திரும்பவும் தாய்க்கழகமான திமுகவிற்கு திரும்பிய அவருக்கு போதிய மரியாதை கொடுக்காததால் அன்புமணிக்கு ஆதரவளித்து பாமகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்காமல் துரோகம் செய்துவிட்டதாகக் கூறப்பட்டவர்களில் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனி மாணிக்கம், தர்மபுரி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் இன்பசேகரன், முன்னாள் அமைச்சருமான முல்லை வேந்தன் பெயரும் சொல்லப்பட்டது.  நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.கவின் வெற்றிக்காக சரியாகப் பணியாற்றவில்லை என்று கூறி, 33 பேர் இடை நீக்கம்செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது. அதில் முக்கிய நபர்களாக பழனி மாணிக்கம், முல்லை வேந்தன் பெயர் தான் முன்னிலையில் இருந்தது.

முல்லைவேந்தன் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினால் மீண்டும் கட்சிக்குள் சேர்த்து கொள்வோம் என்று அன்பழகன் தெரிவித்தார். ஆனால் முல்லைவேந்தன் கடைசிவரை மன்னிப்பு கேட்கவே இல்லை. 

இதனையடுத்து, 2015-ஆம் ஆண்டு தேமுதிகவில் இணைந்தார். ஆனால் அங்கே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்புமும் முக்கியத்துவமும் முல்லைவேந்தனுக்கு வழங்கப்படவில்லை. இதனால் தேமுதிகவிலிருந்தும் சற்று விலகிதான் இருந்தார். திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு, திமுகவிலிருந்து திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மூலம் முல்லைவேந்தனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று முல்லைவேந்தன் திமுகவில்  இணைந்தார். 

கட்சியில் அவருக்கு போதிய வரவேற்பு இல்லாததாலும், தலைமை மீது இருந்த இடைவெளியால் , அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அவர் அன்புமணிக்காக பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் மாவட்டப்பொறுப்பாளராகவும், அமைச்சராகவும் இருந்து கட்சியில் வேட்பாளரை உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்ததால், கட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு, அதன் பின் புதியதாக கட்சி தொடங்கப்பட்ட விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து அங்கும் போனியாகாமல், மீண்டும் தாய்க்கழகத்திற்க்கே திரும்பி வந்து ஒரு வருடம் கூட முழுசா ஆகாத நிலையில் இப்போ அன்புமணிக்கு ஆதரவளிப்பதாக  பாமகவில் சேர்ந்துள்ளார்.