தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும், காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவனும், இவர்களை எதிர்த்து அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் களம் காண்பதால் இந்த தொகுதி மீது ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனமும் திரும்பியிருக்கிறது.

ஓபிஎஸ் மகனை எதிர்க்கு நிற்க வலுவான வேட்ப்பாளரை நிறுத்தும் நோக்கத்தில் லோக்கலில் வெயிட்டான கையாக இருக்கும் ஆண்டிபட்டித் தங்கத்தை காலத்தில் இறங்கியிருக்கிறார். தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடக்கிறது. நாம தோத்தாலும் பரவாயில்ல ஓபிஎஸ் மகன் ஜெயிக்கவே கூடாது என தினகரன் வைத்த செக்கால் திக்குமுக்காடிக்கிடக்கிறது ஓபிஎஸ் கேங். வழக்கமாகக் கட்சி ரீதியாக வாக்குகள் பிரியும் என்ற நிலையில், தேனி தொகுதியில் சாதி ரீதியாகவே  வாக்குகள் பல்க்காக பிரிகிறது சர்வேயில் அம்பலமாகியிருக்கிறது.

தொகுதியின் கள நிலவரங்களையும், மக்களின் மனநிலையையும் அறிந்துகொள்ள தேனி தொகுதிக்குட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் நடத்திய நடத்தப்பட்ட சர்வேயில் பல சுவாரஷ்ய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 57 திருநங்கைகள் உட்பட 11.75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வேட்பாளர்களில் ஓபிஎஸ் மகனான அதிமுக  ரவீந்திரநாத் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அமமுக தங்க தமிழ்ச்செல்வன் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். திமுக வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டிலிருந்து வந்தவர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள இளங்கோவன் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர். தேனி தொகுதி முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிகமுள்ள பகுதி என ஊடகங்களிலும், வெளியிலும் பேசிக்கொண்டிருக்க, தொகுதிக்குள் ஆராய்ந்து பார்த்தால் மறவர், கள்ளர், அகமுடையோர் என முக்குலத்தோர் வாக்குகளைவிட மொழிச் சிறுபான்மை மற்றும் மதச் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

அதேபோல இந்த தொகுதியில் நாடார், நாயக்கர், பிள்ளைமார், யாதவர் சமூக வாக்காளர்கள்தான் அதிகமாக உள்ளனர். இதை விட்டால் கணிசமாக அருந்ததியர் சமூக வாக்குகள் உள்ளன. 

தேனி தொகுதியில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் அதிகளவில் பணத்தை வாரி இறைத்து ஓய்வு இல்லாமல் தேர்தல் பணியாற்றிவருகிறார்கள். இது போக ஓபிஎஸ் மனைவி, மருமகள், தம்பி ஓ.ராஜா மனைவி, அவரது மருமகள் என தனது குடும்பமே கிராமம் கிராமமாக ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளது.

அதிமுக, அமமுக வேட்பாளர்கள் தாறுமாறாக வாக்கு வேட்டையில் இறங்கியிருந்தாலும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனோ தேனி என். ஆர்.டி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பதற்றமில்லாமல் செம்ம கூலாக பிரச்சார வேலைகளைச் செய்துவருகிறார். அதுமட்டுமல்ல அவரது மனைவி வரலட்சுமி, நாயக்கர் வாக்குகளை வளைக்கத் தெலுங்கில் பேசி ஒட்டு கேட்டு வருகிறாராம். 

அமமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் சமூகத்தைச்சேர்ந்த கள்ளர், மறவர் வாக்குகளை பலமாகப் பிரித்துவருவதால் சிறுபான்மையினர் வாக்குகளையும் நாயக்கர், பிள்ளை, நாடார், ரெட்டியார், செட்டியார், தலித் சமூகத்தின் வாக்குகளையும் அலேக்காக அள்ளிவிடும் முயற்சியில் செம்ம ஹேப்பியாக இருக்கிறாராம் இளங்கோவன்.