விவசாயிகளை தனித்தனியா சந்தித்து ரேட் பேசிய மதிமுக கணேசமூர்த்தி! மொத்த ஓட்டையும் அலேக்கா அள்ளும் சாமர்த்தியம்...
பக்கா விவசாய பூமியான ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் விவசாயத்துக்கு தோள் கொடுக்கும் மக்கள் பிரதிநிதி கிடைத்தால், அதைப் போல் ஏற்றம் அந்த மண்ணின் மக்களுக்கு ஏதுமில்லை. இந்த எதிர்பார்ப்பைத்தான் தன் கையில் திறமையாக எடுத்திருக்கிறார் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கணேசமூர்த்தி.
நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். அந்த கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாய தொழில்தான். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே விவசாயிக்கு உரிய விலை நியாயம் கிடைப்பதில்லை என்பதே பெரும் பிரச்னையாக இருக்கிறது. அந்த தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் இதற்கான சிக்கல்களுக்கு தீர்வு தருதலை முன்னெடுத்தாலே தேசம் முழுமைக்கும் இந்த பிரச்னை தீர்ந்துவிடும்.
அதிலும் பக்கா விவசாய பூமியான ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் விவசாயத்துக்கு தோள் கொடுக்கும் மக்கள் பிரதிநிதி கிடைத்தால், அதைப் போல் ஏற்றம் அந்த மண்ணின் மக்களுக்கு ஏதுமில்லை. இந்த எதிர்பார்ப்பைத்தான் தன் கையில் திறமையாக எடுத்திருக்கிறார் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான கணேசமூர்த்தி.
ஈரோடு மண் மஞ்சளுக்கு உகந்த மண். இங்கு விளையும் பல ஆயிரம் டன் மஞ்சள்தான் உலகின் பல பகுதிக்கும் பறந்து சென்று கிருமிகளை துவம்சம் செய்கிறது. ஆனால் அதை விளைவிக்கும் ஈரோடு மஞ்சள் விவசாயியோ வறுமை எனும் கிருமியிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறான். இதற்கான பெரிய விடியலாகத்தான் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார் கணேசமூர்த்தி...’மஞ்சள் விவசாயிகள் மகிழ்வுறும் வகையில், அவர்களின் விளைபொருளான மஞ்சளுக்கு உச்ச விலை பெறுவதற்கான வழிவகை செய்து தரப்படும்.’ என்று சொல்கிறார்.
திமுக. கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தியின் வாக்கு மஞ்சள் விவசாயிகளை மட்டுமல்ல மற்ற விவசாயிகளையும் துள்ளி எழ வைத்திருக்கிறது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கும் பகுதிகளில் சர்க்கரை ஆலைக்கு வழங்குவதற்காக ஆலைக்கரும்பு பயிரிடுவோர்...’நியாய விலை கிடைப்பதில்லை’ என்று வருந்துவதின் துயர் தீர்க்கவும், காங்கயம் பகுதியில் கொப்பரை தேங்காய்க்கான நியாய விலை கிடைப்பதில்லை என்று விசும்பும் விவசாயிகளின் துயர் தீர்க்கவும் என இந்த நாடாளுமன்ற தொகுதியினுள் வரும் கிட்டத்தட்ட அத்தனை விவசாயிகளின் சிக்கல்களுக்கும் தீர்வு கொடுக்கப்போகிறாராம் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி.