தீபாவளி வந்தால் அவனவன் பட்டாசுக்கடை போடுறதும், தைப் பொங்கல் வந்தால் எவனெவனோ கரும்புக்கடை போடுவதும் நம்மூரின் வழக்கம். அதேபோல், எலெக்‌ஷன் வந்தால் ஆளாளுக்கு சர்வே படிவத்தை தூக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். (இதில் சில டீம் கலெக்‌ஷனை எதிர்பார்த்தே இதை செய்யும் என்பது தனி கதை.)

இதோ இந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் பட்டாசு கிளப்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் மூன்றே வாரத்தினுள் தேர்தலே நடந்து முடிந்துவிட இருக்கிறது. என்னடா இன்னமும் பெரிதாய் சர்வே ரிசல்டுகளை காணோமே! என்று பார்த்தால், இதோ இன்று ஒரு ரிசல்ட் வெளியாகியுள்ளது. அதுவும் ஏதோ நம்மூர் ஆளுங்க நடத்திய சர்வே ரிசல்ட் இல்லை இது. கடல்தாண்டி கிடக்கும் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐவா (இது நயன்தாராவின் ’ஐரா’ இல்லை)  எனும் நிறுவனம் ஒரு கணிப்பை நடாத்தி வெளியிட்டுள்ளது. அதன் ரிசல்டோ மாநில மற்றும் மத்தியை ஆளும் இரண்டு கட்சிகளையும் கெக்கேபிக்கேவென குதூகழிக்க வைத்துள்ளது. 

சர்வே ரிசல்டின் ஹைலைட்ஸை பாருங்க மக்களே....

தி.மு.க. வெல்லப்போகும் தொகுதிகள்!:

தூத்துக்குடி (கனிமொழி தப்பிக்கிறாங்களாம்),

திண்டுக்கல், தஞ்சாவூர், ஸ்ரீபெரும்புதூர், வடசென்னை, மத்தியசென்னை. 

காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகள்:

திருச்சி (அரசர் பொழைக்கிறாராம்), சிவகங்கை (அட! கார்த்தி சிதம்பரமுமா), விருதுநகர். 

ஐ.ஜே.கே: பெரம்பலூர் (வேந்தர் எம்.பி.யாகிறாரா?)

அ.தி.மு.க. வெல்லப்போகும் தொகுதிகளாம்:
தென்சென்னை (ஜெயக்குமார் மகன் வின்னிங்கா?),

சேலம் (முதல்வர் மாவட்டம்ல!),

நீலகிரி (ஆ.ராசா அவுட்டா?),

பொள்ளாச்சி (ச்சீய்ய்ய்ய் விஷயங்களை தாண்டியுமா?),

தேனி (பன்னீர் மயன் எஸ்கேப்புலே!)...

பா.ம.க.வுக்கு வாய்ப்பான தொகுதிகள்:

தர்மபுரி (மாறி, முன்னேறிடுவாராம் அன்புமணி)...

பா.ஜ.க. ஜெயிக்கும் தொகுதிகள்:

கன்னியாகுமரி (பொன்னாரு ‘வின்’னார்?), கோவை.

இப்படியாக நீள்கிறது அந்த சர்வே ரிசல்ட். 
அதாவது அ.தி.மு.க. கூட்டணி 27 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், தி.மு.க. கூட்டணி 13 தொகுதிகளில் வெல்லும் எனவும் அந்த சர்வே ரிசல்ட் சொல்கிறதாம். 

ஆனால், கன்னியாகுமரியில் பொன்னாரின் நிலை மிக சறுக்கலாக இருக்கிறது! என்று அக்கட்சியினரே வெளிப்படையாக பேசும் நிலையில், நீலகிரியில் ராசா அழகாய் முன்னேறி வருகிறார்! என்று உளவுத்துறை சொல்லும் நிலையில் இந்த சர்வே ரிப்போர்ட்டானது காமெடியாகவும் பார்க்கப்படுவதுதான் எக்ஸ்ட்ரா ஹைலைட்!