பிரசாரத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரசார வேனிலிருந்து இறங்கி, வயல் வெளிக்கு சென்றார். அங்கிருந்த விவசாயிகளிடம், விவசாய பணி குறித்த விபரங்களை கேட்டதுடன், அதிமுக கூட்டணிக்கு ஓட்டு சேகரித்தார்.

ஒவ்வொரு தொகுதியிலும், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி எடப்பாடி பழனிசாமி, ஓட்டு சேகரித்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில், ஊர் ஊராக சென்று, பிரசாரம் செய்து வருகிறார். 

அடுத்தடுத்து மாவட்டங்களில், பிரசாரத்திற்கு சென்ற போது, தன் பிரசார யுக்தியை மாற்றினார்.நேற்று, சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை, லோக்சபா தொகுதிகளில், அதிமுக, வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பேசிய அவர்; அதிமுக அரசு, விவசாயிகளுக்கு அரணாக இருந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தடுப்பணைகள் கட்ட ரூபாய் நிதி ஒதுக்கபட்டுள்ளது.

நிலத்தடி நீர் உயர்வதற்காக, ஏரிகள், குளங்கள், துார் வாரும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  சீர்காழி வெள்ளப்பள்ளம், உப்பணாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும். காவிரிபூம்பட்டினம், காவிரி ஆற்றில், தடுப்பணைகள் கட்டப்படும். புதிய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், 96 கோடி ரூபாய் மதிப்பில், 235 கிராமங்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என இவ்வாறு பேசினார்.

இதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து, திருவாரூர் செல்லும் வழியில், பனங்குடி கிராமத்தில், வயல் வெளியில், விவசாயிகள் பருத்தி செடி நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே பிரசாரத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் காமராஜ் பிரசார வேனிலிருந்து இறங்கி, வயல் வெளிக்கு சென்றனர். நிலத்திற்குள் செல்லும் முன்பு தனது காலணிகளை கழட்டி விட்டு விட்டு நிலத்தில் நடந்து சென்றனர்.  அங்கிருந்த விவசாயிகளிடம், சுமார் அரைமணி நேரம் அவர்களுடன் சிரித்து மகிழ்ந்து  விவசாய பணி குறித்த விபரங்களை கொட்டுக்கொண்டார்.