உளவுத்துறை ரிப்போர்ட்டால் டென்ஷானான அதிமுக! தேமுதிக மீது செம்ம காண்டில் எடப்பாடியார்!
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில், பிஜேபி பாமகவை தவிர, மற்ற கட்சிகள், தேர்தல் பணியில் மந்தமாக செயல்படுவதாக, அதிலும் தேமுதிக களப்பணி திருப்தி இல்லை என அதிமுக தலைமையிடம் உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில், பிஜேபி பாமகவை தவிர, மற்ற கட்சிகள், தேர்தல் பணியில் மந்தமாக செயல்படுவதாக, அதிலும் தேமுதிக களப்பணி திருப்தி இல்லை என அதிமுக தலைமையிடம் உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு, அதிமுக அமைத்துள்ள கூட்டணியில், பிஜேபி, அதிமுக, தேமுதிக, தமாகா - புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஓட்டுப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிஜேபி - பாமகவினர் தேர்தல் பணி, திருப்திகரமாக இருப்பதாக அதிமுக தலைமையிடம், உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, பாமகவுக்கு, 7 பிஜேபிக்கு 5, தேமுதிகவுக்கு 4, தொகுதிகள் வழங்கப்பட்டன. புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், த.மா.கா.,வுக்கு, தலா, ஒரு தொகுதிகள் வழங்கப்பட்டன. கூட்டணிக்கு, 20 தொகுதிகளை ஒதுக்கிய, அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஒரு சதவிகிதம் கூட மிஸ் ஆகக்கூடாது என்பதற்க்காக, சிறிய கட்சிகள், ஜாதி சங்க தலைவர்களையும், கவனித்து எங்கள் அணியில் சேர்த்தோம். அதுமட்டுமல்ல பிரசாரத்திற்கு வலு சேர்க்கவும், குறிப்பிட்ட சமூக ஓட்டுகளை பெறவும், பழைய நடிகர்கள் சரத்குமார், கார்த்திக்கையும், அதிமுக அணியில் இணைத்தோம்.
இதற்கும் மேல், சோசியல் மீடியா, களப் பணிகளிலும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக, பிஜேபியின் நன்றாக வேலை செய்கின்றனர். பாமகவினர் பரவாயில்லைஎன சொல்லும் அளவிற்கு செயல்படுகின்றனர். ஆனால் தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சியினர், மந்தமாக செயல்படுகின்றனர் என எடப்பாடியாரிடம் உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது.
அதிலும் குறிப்பாக, கூட்டணியில், மூன்றாவது பெரிய கட்சியாக பார்க்கப்பட்ட தேமுதிக பிரசாரம் பெரிதும் கை கொடுக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட போதும், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்டோர் முழு ஈடுபாடு இன்றி, பிரசாரம் செய்து வருவதாகவும் ரிப்போர்ட்டில் உள்ளது அதிமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.