கழட்டி விட்ட பிரேமலதா! கதறி அழும் விருதுநகர் வேட்பாளர்... தலைமையை நம்பி நடுத்தெருவில் நிற்கும் விசுவாசிகள்...
அவங்க மூன்று பேர் தருவாங்கன்னு நம்பி நடுத்தெருவில் நிற்கிறேன், நீங்களாவது காப்பாற்றுங்கள் அண்ணி என தேமுதிக, வேட்பாளர் பிரேமலதாவிடம் கெஞ்சிய தகவல் தேர்தல் பரபரப்புக்கு இடையே கதறி அழுதுள்ளது நடந்துள்ளது.
அவங்க மூன்று பேர் தருவாங்கன்னு நம்பி நடுத்தெருவில் நிற்கிறேன், நீங்களாவது காப்பாற்றுங்கள் அண்ணி என தேமுதிக, வேட்பாளர் பிரேமலதாவிடம் கெஞ்சிய தகவல் தேர்தல் பரபரப்புக்கு இடையே கதறி அழுதுள்ளது நடந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தேமுதிக வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய, நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தலைமை எப்படியும் தேர்தல் செலவுக்கு காசு கொடுக்கும் என நம்பியும், அண்ணியார் கைவிடமாட்டார், என தேர்தல் காலத்தில் இறங்கினார்கள் அந்த மூன்று பேர், இவர்கள் மூவருமே விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீது அளவற்ற விசுவாரமும் அன்பும் கொண்டவர்கள் தான். இதனாலேயே காசே இல்லை என சொல்லியும், அண்ணியாரும் கேப்டனும் சொன்னதைக் கேட்டு தேர்தலில் நிற்க சம்மதித்தனர்.
மொத்தமுள்ள நான்கு தொகுதிகளில் விஜயகாந்த்தின் தீவிர விசுவாசிகளும், கள்ளக்குறிச்சியில், விஜயகாந்த் மைத்துனர், சுதீஷும் போட்டியிடுகிறார். தேர்தல் செலவுகளை செய்வதில், இவருக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. அனால், மற்ற மூன்று பேரை மனதில் வைத்து சிக்கனமாக, அவர் செலவு செய்வதால், அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
ஆனால், மற்ற மூன்று வேட்பாளர்களும், தேர்தல் செலவிற்கு பணம் இல்லாமல், திண்டாடி வருகின்றனர். அதில், விருதுநகர் வேட்பாளர், அழகர்சாமியும் ஒருவர்.ஏற்கனவே, திருச்சி வேட்பாளர், இளங்கோவன், விஜயகாந்தை தொடர்புகொண்டு, தேர்தல் செலவிற்கு உதவி செய்யுங்கள் என புலம்பி தள்ளியுள்ளார். ஒண்ணுமே செய்யமுடியாது என பிரேமலதா மறுத்து விட்டார்.
அவரைப் போலவே, விருதுநகர் வேட்பாளர் அழகர்சாமி, பிரேமலதாவை தொடர்புகொண்டு, மூன்று அண்ணன்களை நம்பி, ஏமாந்து விட்டேன்; நீங்களாவது காப்பாற்றுங்கள் என்று கண் கலங்கி கெஞ்சியதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து, தேமுதிக வட்டாரத்தில் ; வேட்பாளர், அழகர்சாமி, பிரசாரத்தின் போது, எனக்கு உடன்பிறந்த அண்ணன்கள் இல்லை என்றாலும், அமைச்சர்கள், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் அண்ணன்களை போல உள்ளனர். இந்த மூன்று அண்ணன்களால், எனது வெற்றி உறுதி என சொல்லி வந்தார்.
ராஜன் செல்லப்பா தனது மகன், ராஜ்சத்யன், மதுரையில் போட்டியிடுவதால் அவர் அங்கு செம்ம பிசியாகி விட்டார். அதேபோல அமைச்சர் உதயகுமாரோ தேனியில் துணை முதல்ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பிரசாரத்தில் தீயாக வேலை பார்த்து வருகிறார்.
தேமுதிக வேட்பாளர் அழகர் சாமிக்கு ஆதரவாக ராஜேந்திர பாலாஜி மட்டும் பிரசாரம் செய்து வருகிறார். இவர்கள் மூவரிடமும், தேர்தல் செலவிற்கு, அழகர்சாமி பணம் கேட்டுள்ளார். பணம் தராமல், மூன்று பேரும் டாட்டா காட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தான், பிரேமலதாவிடம் வேட்பாளர் கெஞ்சியுள்ளார். அதற்கு பிரேமலதா, கட்சி தலைமையை எதிர்பார்க்காமல் அந்த பணத்தை செலவிடுங்கள்' என்று கூறியுள்ளார். இதனால், வேட்பாளர் அழகர்சாமி பயங்கர சோகத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.