சந்தோஷத்துடன் கவுண்டிங்கை துவக்கிய தி.மு.க: திக் திக் திக் இ.பி.எஸ்., ஓ.பி.ஸ்.

இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியநாள். காரணம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தினம் இன்று. அது மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சி மாற்றமே நிகழுமோ!? எனும் கேள்விக்கும் பதில் தெரியும் நாள் இன்று. 
 
by poll Vote counting started in tamilnadu

இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியநாள். காரணம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தினம் இன்று. அது மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சி மாற்றமே நிகழுமோ!? எனும் கேள்விக்கும் பதில் தெரியும் நாள் இன்று. 

எக்ஸிட் போல்- முடிவுகள் சொன்னது போலவே அகில இந்திய அளவில் பி.ஜே.பி. கூட்டணி அடித்து நொறுக்கி முன்னிலை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் தமிழகத்தை பொறுத்தவரையில்  தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலை பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முடிவுகளில் மட்டுமல்லாது  சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளிலும் தி.மு.க. அடித்து ஏறுகிறது. இந்த நிலையானது முதல்வர் இ.பி.எஸ். மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் மனதில் ஆட்சியை நினைத்து திக் திக் திக் நிலையை உருவாக்கி இருக்கிறது. 

இவ்வளவு இக்கட்டான சூழலிலும் தேனியில் தன் மகன் ரவீந்திரநாத் சற்று முன்னிலை பெற்று வருவதால் ஓ.பி.எஸ். லேசான ஆறுதலுடன் இருக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios