ஆரணியில் போட்டியிட்டு அன்புமணியின் மச்சான் டாக்டர் விஷ்ணுபிரசாத், அதிமுக வேட்பாளர் சேவல் ஏழுமலையை பாமகவின் வாக்குவங்கியின் பலத்தோடு படுதோல்வி அடைய வைத்துள்ளார்.

அதிமுகவின் கோட்டையாகவும், பாமகவின் பலமான வாக்கு வங்கியை வைத்துள்ள இந்த ஆரணி தொகுதியில் அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ளது. ஆரணி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார் என முன்பே தெரிந்து வைத்திருந்த அன்புமணி, அதிமுக கூட்டணியில் அந்த தொகுதியை பிளான் போட்டு தள்ளிவிட்டுள்ளார். வட மாவட்டங்களில் வன்னியர்கள் வாக்கு வங்கிகளில் ஆரணி தொகுதியும் ஒன்று. கட்சியின் வாக்கு வங்கியை பலமாக வைத்திருக்கும் பாமக வேண்டாமென்று சொன்னது அதிமுகவை அதிரவைத்தது.

அந்த தொகுதியை வேண்டாவெறுப்பாக சேவல் ஏழுமலைக்கு மீண்டும் கொடுத்தது. இவர் தான் கடந்த 5 வருஷம் MPயா இருந்தாருன்னு இவர் சொன்னாதான் மக்களுக்கே தெரியும். அந்தளவுக்கு தான் இவருக்கும் இவர் இருந்துள்ளார். மக்களுக்கும் இவருக்கும் தொடர்பே இருந்ததே இல்லை, செஞ்சி, செய்யார் ஆகிய இரண்டு தொகுதியில் தான் இவரை எப்பவாவது பாக்க முடியும். மத்தப்படி எந்த அரசு நிகழ்ச்சி, கட்சிக்காரன் வீட்டு விசேஷம், துக்கம் எதுக்கும் மனுஷன் தலய காட்டவே மாட்டாரு. இவருக்கு சீட் கொடுத்ததும் பதிலா கூட்டணிக்கு இந்த தொகுதியை அறிவிச்சிருந்தா நாங்களே சிறப்பா வேல பார்த்து ஜெயிக்க வைப்போம், இவருக்காக தொகுதிக்குள்ள ஒட்டு கேட்க அழைச்சிட்டுப் போனால் மக்கள் வெறித்துப் பார்ப்பதாக அதிமுகவினரே சொன்னார்கள்.

இந்நிலையில், சேவல் ஏழுமலைக்கு ஆதரவாக கூட்டணியில் உள்ள அன்புமணி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது  பேசிய அவர், நாங்க வேகாத வெயிலிலே நிற்கிறோம். நீங்க வேட்பாளர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் சி.வி.சண்முகத்தை மேடையில் வைத்துக்கொண்டே பேசினார். அதுமட்டுமா? அந்த மேடையின் தனது மச்ச்சானை ஒரு வார்த்தைக் கூட விமர்சிக்கவில்லை. குடும்ப உறவைவிட கூட்டணி தர்மத்துக்காக பாமக உழைக்க வேண்டும் எனப் பேசியும் தேர்தல் பரப்புரையின் போது விஷ்ணுபிரசாத் குறித்து பேசாதது மச்சானுக்கு மறைமுகமாக அன்புமணி ஆதரவளிக்கிறார் என அப்போதே பேச்சு நிலவியது.

பணபலம், வன்னியர்கள் வாக்குவங்கியென வெயிட்டான பின்புலத்தோடு களமிறங்கிய இந்த விஷ்ணுபிரசத்தின் தந்தை தான் கிருஷ்ணசாமி, இவரும் ஏற்கனவே எம்பியாக இருந்தவர். அதோடு அன்புமணியின் மைத்துனர், அதாவது அன்புமணி மனைவியின் தம்பிதான் இந்த விஷ்ணு பிரசாத். கூட்டணியில் பாமக இருந்தாலும், வன்னியர் வாக்குகள் அப்படியே அன்புமணியின் மைத்துனருக்கே மொத்தமாக விழுந்துள்ளது தெளிவாக தெரிகிறது.