எச்.ராஜாவை வெற்றி பெற செய்வீர்களா. மோடியை பிரதமர் ஆக்குவீர்களா? அமித்ஷா வெறித்தனமான பேச்சு...
தமிழகத்தில்அதிமுக பிஜேபி கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என துாத்துக்குடியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா பேசினார்.
தமிழகத்தில்அதிமுக பிஜேபி கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என துாத்துக்குடியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா பேசினார்.
துாத்துக்குடி லோக்சபா தொகுதி பிஜேபி, வேட்பாளர் தமிழிசை, விளாத்திகுளம் இடைத்தேர்தல் அ.தி.மு.க.,வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து துாத்துக்குடி எட்டையபுரம் சாலையில் நடந்த கூட்டத்தில் பேசினார் அமித்ஷா.
சிவகங்கை தொகுதி பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் 50 கோடி பேருக்கும் மேலாக பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுள்ளனர். பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் 50 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இத்தேர்தலில் மோடி தலைமையில் சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது. இன்னொரு பக்கம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழலில் சிக்கியுள்ள கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் அ.ராசா, சிதம்பரம், காங்., வேட்பாளர் கார்த்தி ஆகியோரை கொண்ட கூட்டணி.
சமீபத்தில் ராகுல் பேசும்போது, 'அனைவருக்கும் தக்க திட்டம் தர வேண்டும். யாரும் சிறைச்சாலைக்கு செல்லக்கூடாது' என்றார். ஒருவேளை அவர் வேட்பாளர் கார்த்தியை மனதில் வைத்து சொல்லியிருப்பாரோ என தோன்றுகிறது. தமிழகத்தில் ராணுவ தளவாட பொருள் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. 'சாகர்மாலா' திட்டத்திற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். அதே போன்று துறைமுகங்களில் கன்டெய்னர்கள் நிறுத்த 151 கோடி ரூபாய், கன்டெய்னர் உற்பத்திக்கு 60 கோடி ரூபாய் என திட்டங்கள் வந்துள்ளன.
கிழக்கு கடற்கரை சாலைக்காக 13 ஆயிரத்து 790 கோடி ரூபாய் திட்டம் தயாராகியுள்ளது. இந்த அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. கூட்டணி கட்சி நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். கூட்டணியின் துடிப்பு மிக்க வேட்பாளர் எச்.ராஜா நிற்கிறார். ஊழல் மிகுந்த கார்த்திக்கு எதிராக வாக்களித்து, எச்.ராஜாவை வெற்றி பெற செய்யுங்கள். சிவகங்கையில் எச்.ராஜாவை வெற்றி பெற செய்வீர்களா. மோடியை பிரதமர் ஆக்குவீர்களா. இவ்வாறு அவர் பேசினார்.