கேபி முனுசாமியை தோற்கடிக்க காலில் விழும் அமமுக ஒன்றியசெயலாளர்!! அதிர்ச்சியில் அதிமுக ...
ஒருபக்கம் உள்ளடி வேலை செய்துவரும் பதவியை பறிகொடுத்த பாலகிருஷ்ணா ரெட்டி, மறுபக்கம் தினகரனின் அமமுக நிர்வாகிகள் என கேபி முனுசாமியை தோற்கடிக்க பல்வேறு வகையில் வேலை பார்த்து வருகிறார்களாம்.
ஒருபக்கம் உள்ளடி வேலை செய்துவரும் பதவியை பறிகொடுத்த பாலகிருஷ்ணா ரெட்டி, மறுபக்கம் தினகரனின் அமமுக நிர்வாகிகள் என கேபி முனுசாமியை தோற்கடிக்க பல்வேறு வகையில் வேலை பார்த்து வருகிறார்களாம்.
கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக கேபி முனுசாமி களம் காண்கிறார். ஜெயலலிதா நெருக்கடியான காலகட்டத்தில் இருந்தபோது மிகவும் உதவியாக இருந்தவர் இவர்தான். ஜெ.வின் ஆதரவையும் அபிமானத்தையும் எளிதாகவே பெற்றார் கேபி முனுசாமிக்கு கட்சியிலும், தொகுதியிலும் கணிசமான ஒரு செல்வாக்கு இருக்கிறது.
ஒரு பக்கம், ஏற்கனவே பதவி போன அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி. சட்டமன்ற தேர்தலில் தன் மனைவி போட்டியிட வாய்ப்பு கிடைத்துவிட்டாலும், எம்பி பதவி என்பது பெரிய விஷயம். இன்றைக்கு தனக்கு எந்த செல்வாக்கும் இல்லாத நிலையில் ஒருவேளை கேபி முனுசாமி ஜெயித்துவிட்டால், தொகுதியில் நமக்கான முக்கியதத்துவம் இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறாராம். அதனால் கேபி முனுசாமிக்கு எதிராக உள்ளடி வேலைகளை செய்து வருகிறாராம்.
ஆனால் கேபி முனுசாமியோ இந்த தேர்தலில் எக்கச்சக்கமான விஷயங்களை செய்து எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம். ரெட்டியின் உள்ளடி வேலைகளையும் சமாளித்துவரும் இவருக்கு, அமமுக நிர்வாகி ஒருவர் செய்த செயல் அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அதாவது, அதிமுக வேட்பாளர் கேபி.முனுசாமி தோற்கவேண்டி, கேபி முனுசாமியின் சொந்த ஒன்றியமான காவேரிபட்டிணம் ஒன்றியத்தில் வழக்கறிஞர் வெற்றிவேல் வாக்காளர்கள் கால்களில் விழும் அமமுக ஒன்றிய செயலாளரின், செயலைக் கண்டு அந்த பகுதி அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.