எனக்கு இன்னொரு பேரு இருக்கு ‘பைப் கனெக்ஷன் மணிமாறன்’!! ஈரோடு அதிமுக வேட்பாளரின் பழைய STD
அடாவடி பண்ணி சேர்த்து வெச்ச பணத்தை இப்போ செலவு பண்ணி முதலீடு செஞ்சுட்டு இருக்கிறார். இந்த தேர்தல்ல ஜெயிச்சுட்டா, அஞ்சு வருஷமும் மக்கள் நிதியை முழுமையா முழுங்கி ஜீரணம் பண்ணி, செட்டிலாகிடுவார் அதிமுக வேட்பாளர் என திமுக கூட்டணி வேட்பாளர் கதிகலங்க விடுகிறார்.
வேட்பாளர் தனது பலத்தையும், பாஸிடீவ் விஷயங்களையும் சொல்லி வாக்குகள் கேட்பது. இன்னொன்று, முக்கிய எதிர் வேட்பாளரின் குறைகளையும், பலவீனத்தையும், மைனஸ்களையும் சொல்லி வாக்கு கேட்பது. இதில் ஏதாவது ஒரு உபாயத்தைத்தான் பொதுவாக அரசியல் கட்சிகள் பெரிதாய்க் கையிலெடுத்துக் களமாடுவார்கள். ஆனால் வாக்காளர்களே அந்த வேட்பாளர் செய்த பழைய தில்லாலங்கடி வேலைக்கு ஆப்படிக்கும் விதமாக பல மேட்டரை சோசியல் மீடியாவில் உலாவ விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அது என்னனா? தி.மு.க. கூட்டணி வேட்பாளரான மதிமுகவின் கணேசமூர்த்திக்கு ப்ளஸாக அதிமுக வேட்பாளரின் பழைய ஹிஸ்ட்ரியே சப்போர்ட்டாக இருக்கிறது. வெங்குவுக்கு எதிராக பழைய கதை ஒன்றுக்கு புத்தம் புது பெயிண்ட் அடித்து உலவ விட்டுக்கொண்டிருக்கின்றனர் காங்கேயம் வாசிகள். அதாவது…வெங்கு மணிமாறன் கடந்த 2011 முதல் 2016 வரை காங்கயம் நகராட்சி தலைவராக இருந்தபோது செய்த சித்து வேலைகளை நினைவுபடுத்தி சிலவற்றைக் கோடிட்டுக் காட்டி அவரை டேமேஜ் செய்து வருகின்றனர்.
அதில் ஹைலைட் விஷயங்களாவன….
* தண்ணீர் பைப் கனெக்ஷன் வாங்க இவருக்கு ரூபாய் பனிரெண்டாயிரம் கமிஷன் கொடுக்க வேண்டும். மொத்தம் மூவாயிரத்து இருநூறு கனெக்ஷன்களுக்கு இந்த வகையில் எவ்வளவு அடித்திருப்பார் என்று யோசியுங்கள். இது போக கனெக்ஷனுக்கு தேவைப்படும் fitting விஷயங்களை இவரது அரிசி ஆலையில்தான் வாங்க வேண்டும். அதற்கும் 30% லாபம் வெச்சு விற்றுள்ளார்.
* ஒரு விஷயம் தெரியுமா? இப்போ ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அடங்கும் ஒரு முக்கிய சட்டசபையான காங்கயம் தொகுகுதியில இவரை ‘பைப் கனெக்ஷன் மணிமாறன்’ அப்படின்னுதான் மக்கள் கூப்பிடுவாங்க.
* காங்கயம் – சென்னிமலை ரோடு அகலப்படுத்தும் வேலை நடந்தபோது, இவர் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் நடத்தும் இடத்திற்கு அந்த மண்ணை லோடு லோடாக கொண்டு சென்றிருக்கிறார்.
* இவரும், இவரது நெருங்கிய உறவினரும் சேர்ந்து கட்டபஞ்சாயத்து செய்து ரியல் எஸ்டேட் எனும் பெயரில் நிலங்களை மிரட்டி வாங்கியதாகப் புகார் உள்ளது.
வெறுமனே ஒரு நகராட்சியின் சேர்மனாக இருக்குறப்பவே இம்பூட்டு வேலைகளை பார்த்து, பணம் சேர்த்த மனுஷன் கையில எம்.பி. பதவியை கொடுத்தீங்கன்னா என்னாகும் மக்களே? அடாவடி பண்ணி சேர்த்து வெச்ச பணத்தை இப்போ செலவு பண்ணி முதலீடு செஞ்சுட்டு இருக்கிறார். இந்த தேர்தல்ல ஜெயிச்சுட்டா, அஞ்சு வருஷமும் மக்கள் நிதியை முழுமையா முழுங்கி ஜீரணம் பண்ணி, செட்டிலாகிடுவார்.
சூதானமா இருங்க ஈரோடு மக்களே!” என்று பிரசாரத்தில் வெளுக்கிறார்கள்.
இதைப்பார்த்து மிரண்டு கிடக்கும் ஆளுங்கட்சி தரப்போ, இதை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என புரியாமல் தலை சுற்றிக்கிடக்கிறதாம்.