தெய்வமே நீங்க வரவே வேணாம்... நாங்களே பாத்துக்குறோம்... செம்மலையால் அன்புமணியை அவாய்ட் பண்ணும் அதிமுக
அன்புமணி போகும் கூட்டங்களில் திமுகவினருக்கு தினகரனின் அமமுகவினரும் பிளான் போட்டு குழப்பம் ஏற்படுத்துவதாலும், அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் ஏதாவது பிளான் போடுகிறாரோ என அஞ்சும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அன்புமணியை தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பதை, தவிர்த்து வருகின்றனர்.
அன்புமணி போகும் கூட்டங்களில் திமுகவினருக்கு தினகரனின் அமமுகவினரும் பிளான் போட்டு குழப்பம் ஏற்படுத்துவதாலும், அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் ஏதாவது பிளான் போடுகிறாரோ என அஞ்சும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அன்புமணியை தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பதை, தவிர்த்து வருகின்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர், எடப்பாடி பளானிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை, ராமதாஸ், அன்புமணி இருவரும், கடுமையாக விமர்சித்தனர். அதுமட்டுமா கவர்னரிடமும், ஆளுங்கட்சியின் ஊழல் குறித்து அடுக்கடுக்கான லிஸ்ட் கொடுத்தனர்.
ஆனாலும், பிஜேபியில் அறிவுறுத்தலாலும், இடைத்தேர்தலில் சில தொகுதிகளில் பாமக வாக்கு வங்கியை மனதில் வைத்தும் அதிமுக, தலைமை, பாமகவை கூட்டணியில் சேர்த்தது. இதனால், அதிமுக - பாமக தலைமை மீது, விமர்சனங்கள் எழுந்தன. இது, தேர்தல் பிரசாரம் துவங்கியதும் அடங்கி விடும் என, இரு கட்சி தலைமையும் எதிர்பார்த்தன. தங்கள் கூட்டணிக்கு, பாமக வராததால் , ஸ்டாலின், தன் பிரசாரங்களில், அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து, ராமதாஸ், அன்புமணி பேசியதை நினைவு படுத்தி அதிமுகவினரை கடுப்பேத்தி வருகிறார்.
திமுக ஐதி விங்கில், வீடியோ டீம் ஒன்றை உருவாக்கி இருவரும் பேசிய வீடியோ பதிவுகளை, சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, தினகரன் தரப்பினரும்,அதிமுகவினர் என்ற பெயரில், சிலரை துாண்டி விட்டு, அன்புமணி பிரசாரம் செய்யும் இடங்களில், சம்பந்தம் இல்லாத கேள்விகளை, அவரிடம் கேட்டு, குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், சேலத்தில், அன்புமணி பிரசாரம் செய்தபோது, கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர், எட்டு வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த அய்யா இப்போது அதிமுகவோடு கூட்டணி வைத்தால் எப்படிங்க அய்யா? என்று கேள்வி எழுப்பினார். இதை சகித்துக்கொள்ளாத செம்மலை எம்.எல்.ஏ தன் சொந்தக் கட்சி தொண்டர் என்றும் பாராமல் பலர் முன்னிலையில் கேள்வி கேட்ட நபரை கன்னத்தில் பளார் பளார் என இரண்டுமுறை அறைந்தார். அதன் பின்னர் கட்சியினரும் போலீசாரும் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில் அந்த நபர் சிந்தாமணியூர் அருகே உள்ள செந்தில்குமார் என்பதும், தீவிர அதிமுக தொண்டர் என்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே அவர் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
அதிமுக - எம்.எல்.ஏ., செம்மலை மூக்கிலே வெளு வெளுன்னு வெளுத்த சம்பவமும் அரங்கேறியது. இதையும், திமுகவினர், சமூக வலைதளங்களில், வேகமாக பரவ செய்தனர். திட்டம் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அன்புமணி, பிரசாரம் செய்ய உள்ளார்.
இதனால், அந்த இடங்களில், அவருக்கு எதிராக, வன்னியர் சங்க அறக்கட்டளை, பாமக முன்னாள் நிர்வாகி குரு மரணம் உள்ளிட்டவை தொடர்பாக கேள்விகளை எழுப்பி, குழப்பம், பிரச்னை ஏற்படுத்த, திமுக - அமமுக, திட்டமிட்டுள்ளன. இந்த தகவல், உளவு பிரிவு போலீசார் வாயிலாக, அதிமுகவினருக்கு தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அன்புமணியை, தங்கள் தொகுதியில் பிரசாரத்திற்கு அழைக்க, அதிமுக வேட்பாளர்களும், நிர்வாகிகளும் தவிர்த்து வருகின்றனர். அப்படியே, அன்புமணியை அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், வாகனத்தில் சென்று கை அசைத்தபடி, பிரசாரம் செய்யுமாறு வேண்டுகோள் வைத்தே அழைத்துச் செல்கிறார்களாம்.