பணபலம், சொந்த செல்வாக்கு, கூட்டணி கட்சிகளின் வாக்குவங்கி, ரஜினியின் மறைமுக ஆதரவு என பலம் பொருந்தி எப்படியும் ஜெயித்துவிடுவோம் என கனவில் இருந்த ஏசி சண்முகத்துக்கு சற்று முன்பு வெளியான தகவல் தேர்தலில் நிற்கும் ஆசையே போய்விட்டதாம். 

நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து முடித்திருந்த நிலையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியில் களமிறங்கிய ஏசி சண்முகம் அதிக வாக்குகள் வாங்கி தரும் தொகுதி நிர்வாகிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை என ஏசி சண்முகம் அறிவிக்க, 50 லட்சம் பரிசு என போட்டிக்கு துரைமுருகணும் சொல்ல கதிர்ஆனந்த் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு செய்து 10 லட்சம் பறிமுதல் செய்தது. ஆதரவாளர் வீட்டில் 11 கோடி ரூபாய் பணத்தினை பிடித்தது. 

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தின் கல்லூரி, பள்ளி மற்றும் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து  
பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை  செய்தது, இதனை ஏற்று தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர்.   வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதியநீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்கம்  கடந்த ஒரு மாத காலமாக வேகாத வெய்யிலில் தொகுதி முழுவதும் தீயாக பிரசாரம் செய்து வந்தார். 

"மண்ணை வாரிப்போட்ட கதிர் ஆனந்த்"

பணபலமும், களப்பணியாற்றுவதிலும் வல்லவரான ஏ.சி. சண்முகம் அதிமுக வேட்பாளர் பி. செங்குட்டுவனிடம் தோல்வியடைந்தார். செங்குட்டுவன் 387719 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட  ஏ.சி. சண்முகம் 324326 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து தோல்வியை தழுவினார். 

சுமார் 50 கோடிக்கு மேல் பணத்தை வாரி இறைத்து அதிமுக வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே இவர் இங்கு தோல்வியை தழுவினார். அப்போது பிஜேபி கூட்டணியில் பெரிய கட்சி என்று கூறுவதாக இருந்தால் பாமக மட்டுமே என சொல்லலாம். அதேபோல, அதிமுக, பாமக, பிஜேபி எல்லாம் ஓரணியில் இருப்பது ஒரு பலமாக இருந்தாலும், இரட்டை இல்லை சின்னம், ரஜினியின் மறைமுக ஆதரவு என எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். 

இதெல்லாம் விட ஏற்கனவே பார்த்து வைத்த வேலை அதாவது 50 கோடி ரூபாய் வரை செலவு செய்திருந்தார். இது போக இந்தமுறை சுமார் 100  கொடிவரை செலவு செய்துள்ளார். அதாவது ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என பண விநியோகம் செய்துள்ளனர். ஆனால் தற்போது செய்துவைத்த வேலை மற்றும் 100 கோடி பணம் என மொத்தமாக பறிபோன சோகத்தில் இருக்கிறாராம் சண்முகம். ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்த மனுஷன், எம்பி ஆகும் ஆசையில், வேகாத வெய்யிலில் தலையில் குல்லா கூட போடாமல் பிரசார வாகனத்தில் நின்றுகொண்டு சுற்றி சுற்றி ஓட்டு கேட்டும், சுமார் 100 கோடிக்கு மேல் செலவு செய்தும் ஒரு புரியோஜனமும் இல்லாமல் ஆக்கிய துரைமுருகன் மற்றும் கதிர்ஆனந்த் மீது செம்ம காண்டில் இருக்கிறாராம் ஏசி சண்முகம்.