பிடிங்கயா அந்த சீன பட்டாச, ..........10 இலட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அறிவிச்சிருக்காங்க.......

சிவகாசியை  அழிக்கும் சீன  பட்டாசுகளை  தயவு  தாட்சண்யம் பார்க்காமல்,  பிடித்து கொடுங்கள் , தொழிலை காப்பாற்ற  முன்வாருங்கள் என  தமிழ்நாடு  பட்டாசு  தொழில்  தொழிலாளர் பாதுகாப்பு  சங்கம்  சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது  தீபாவளி  நெருங்குவதால்  சீன பட்டாசுகள்  இந்தியாவில் அடி எடுத்து  வைக்க   தொடங்கி உள்ளது .

மேலும் அதில் பல தீங்கு விளைவிக்கும்  ரசாயன  பொருட்கள் அதிகம்  இருப்பதாகவும்  தகவல்  வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல், சீன பட்டாசுகளின்  வருகையால், இந்தியாவில், குறிப்பாக சிவகாசி பட்டாசு விற்பனை  பாதிக்கப்படும்  என அஞ்சப்படுகிறது.

சிவகாசியை பொறுத்தவரை சுமார் 5  லட்சம்  தொழிலாளர்கள், பட்டாசு தொழிலையே தங்கள்   வாழ்வாதாரமாக  வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  சீன பட்டாசுகளை  முற்றிலும்  தவிர்க்கும் பொருட்டு தற்போது,   சீனபட்டாசுகளை பிடித்து  கொடுப்போருக்கு  மெகா ரொக்க பரிசு  அறிவிச்சு இருக்கு தமிழ்நாடு  பட்டாசு  தொழில்  தொழிலாளர் பாதுகாப்பு  சங்கம்.

அதாவது,  ஒரு  கண்டேய்னர்  பிடித்து  கொடுத்தால்   -  10,00,000 ரூபாய்

ஒரு லாரி பிடித்து  கொடுத்தால்                                               -   5,00,000  ரூபாய்

ஒரு  வேன் பிடித்து  கொடுத்தால்                                      -    2,00,000     ரூபாய் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை  ஏற்படுத்தும்  வகையில இந்த உற்சாக  அறிவிப்பை  வெளியிட்டு  உள்ளது தமிழ்நாடு  பட்டாசு  தொழில்  தொழிலாளர் பாதுகாப்பு  சங்கம்