Asianet News TamilAsianet News Tamil

தீபாவளியை வரவேற்க .....வண்ண விளக்குகளுடன் உற்சாகத்தில் சிங்கப்பூர்..!!!

diwali singapore-special
Author
First Published Oct 9, 2016, 6:23 AM IST


இந்தியாவை பொறுத்தவரை   தீபாவளிக்கு  ,  மக்கள்  அதிகம்   முக்கியத்துவம்   கொடுப்பார்கள். அதுமட்டும் இல்லாமல்,  மற்ற  எந்த  ஒரு பண்டிகையை ஒப்பிட்டு பார்த்தாலும்,  தீபாளிக்கு   எப்பொழுதும்  ஒரு தனி மவுசு தான் .........

தீபாவளிக்கு......... விடுமுறை எடுப்பதில் இருந்து, ...... புத்தாடை அணிந்து, காரம் , இனிப்பு  என  பலதரப்பட்ட பலகாரங்களை , நம்  நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சேர்ந்து  கொண்டாடும் , அந்த  தருணம் உண்மையிலேயே  மிகவும்  அற்புதமான  தருணம் ...தான் .......!!!

அது மட்டுமா,  பட்டாசு  பற்றி  சொல்லவா  வேண்டும்,  வண்ண மயமான  பட்டாசுகள்,  இரவு  முழுக்க ......வெடி சப்தத்துடன்  தீபாவளி கொண்டாடும் முறையே  தனிபட்ட  சிறப்பு.......

அது சரி ... இப்ப  நான் என்ன  சொல்ல  வரேன் என்றால் ........,

நாட்களை  எண்ணி கொண்டு, தீபாவளிக்காக  காத்திருக்கும் நாம் இங்கே..........

இப்பொழுதே  தீபாவளியை கொண்டாட  ஆரம்பித்துவிட்டது சிங்கபூர்  அங்கே..............

அதாவது, உலக நாடுகளில் இந்த வருட தீபாவளியை கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்திற்கு முன்பே வரவேற்ற தொடங்கியுள்ளது  சிங்கபூர் ,....!

சிங்கப்பூரின்  உள்ள மொத்த மக்கள்  தொகையின் ,  வெறும் 10% மட்டுமே உள்ள இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தீபாவளி, பொங்கல், தைப்பூசம் போன்ற இந்து  பண்டிகையை,  சிங்கபூர்  அரசே ஏற்று சிறப்பாக  நடத்துவது வழக்கம்..

அதே போன்ற, இந்த ஆண்டும், இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் உணர்வுக்கும், கலாச்சாரத்திற்கும் மதிப்பளித்து தீபாவளியை அரசே ஏற்று சிறப்பாக நடத்த  முன் வந்துள்ளது,.

இதன் தொடர்ச்சியாக, .இந்த  தீபாவளிக்கு இந்தியாவின் தேசிய பறவையான மயிலை கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்ட , அழகான  இந்த  மயில்  உருவம்  அனைவரின்   உள்ளதையும்  கொள்ளை அடித்துள்ளது.  

வண்ண ஒளி விளக்குகளோடு, காட்யளிக்கும், இந்த வண்ண மயிலை பார்த்து மயங்காதோர்   யாரும் இல்லை எனலாம்.

சிங்கப்பூரில், LITTLE INDIA வின் முகப்பில் பிரமாண்டமாய் அமர்ந்து வரவேற்கும் ஒரு ஜோடி மயில்கள்  பார்பதற்கு மிக பிரமிப்பாக  உள்ளது........

இது தவிர தீபாவளி சந்தை, கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் என ஏராளமான சிறப்புகளுடன் தீபாவளிக்குயை  எதிர்நோக்கி  உள்ளார்கள் ...... நம்ம   சிங்கபூர் தமிழர்கள்............

ஸ்வீட்டோடு  கொண்டாடி,  மயிலோடு  விளையாடி .........தீபாவளியை  நாமும்  கொண்டாடலாமா..........!!!! 

Follow Us:
Download App:
  • android
  • ios