மருந்து கம்பெனி ஊழியரிடம், சுமார் 2 லட்சம் ரூபாயை காருடன் தப்பித்துச் சென்ற பெண்ணையும், விபச்சாரம் செய்யும் புரோக்கரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டக்கல்லைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னையில் மருந்து கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மனைவி, கடந்த 2016ல் மனைவியுடன் ஏற்பட்டத் தகராறால், குழந்தையுடன், தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

சில மாதங்களுக்கு முன் சக்திவேலின் மனைவி  உடல்நிலை பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமயத்தில் சக்திவேலும் கூடவே இருந்துள்ளார். அப்போது, அங்கு ஒரு பெண்ணுடன் வந்த வாணியம்பாடியை சேர்ந்த சீனுவுக்கும், சக்திவேலுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. 

சீனுவுக்கு பெண்கள் வைத்து புரோக்கர் வேலை செய்வதால், சக்திவேலுக்கும் தொடர்பு ஏற்படுத்தி அவர் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த பழக்கத்தின் அடிப்படையில் சீனுவின் சொந்தக்கார பையன் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சக்திவேல் ரூ.2 லட்சம் லஞ்சமாக வாங்கியுள்ளார். ஆனால் 4 மாசம் ஆகியும் வேலை வாங்கித்தரவில்லை.  

இந்த சமயத்தில் கடைசியாக சில நாட்களுக்கு முன்பு உல்லாசமாக இருக்க பெண் தேவை என, புரோக்கர் சீனு விடம் கேட்டுள்ளார். சக்திவேல் கேட்ட மாதிரியே சுவேதா என்ற பெண்ணை அனுப்புவதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்கான விலை எவ்வளவு என சொல்லியிருக்கிறார்.

இதை பயன்படுத்தி   தான் கொடுத்த 2 லட்சத்தை ஆட்டையைப் போடவும் கூடவே காரை திருடவும் பிளான் போட்டுள்ளார் புரோக்கர் சீனு ஒரு பெண் நம்பரை கொடுத்தார். அந்த நம்பரில் சக்திவேல்  போன் செய்திருக்கிறார், அப்போது சுவேதா என்ற பெண் பேசியிருக்கிறார். நேற்று முன்தினம் சக்திவேல், சுவேதாவை ஜோலார்பேட்டைக்கு அழைத்தார். அவரும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர், சக்திவேலும், சுவேதாவும் காரில் தனியார் விடுதிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்காக, ரூ.4 ஆயிரத்தை சுவேதா பெற்றுக்கொண்டார். 

அந்த சமயத்தில், குளியலறைக்குள் குளிக்க சென்ற சக்திவேலை, குளியலறைக்குள் வைத்து பூட்டிய சுவேதா, சக்திவேல் தனது லேப்டாப் பையில் வைத்திருந்த, 2 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு அவரது, மாருதி ஸ்விப்ட் டிசையர் காரில் தப்பிச்ச சென்றுள்ளார். குளியலறையில் இருந்து சக்திவேல் கதவை தட்டியும் திறக்காததால், செல்போனில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து சக்திவேலை மீட்டனர்.   

இதனைத் தொடர்ந்து ஏலகிரி மலை போலீஸ் விசாரணையில், ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு சுவேதா தப்பித்துச்  சென்றதும், புரோக்கர் சீனுவாசன் இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளதால். இருவரையும் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.