கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் மகாராணி. அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராணியின் தந்தை விபத்தில் இறந்து விட்டார். இவரது அம்மாவின்அரவணைப்பில் வளர்த்து வந்தார். 

இந்நிலையில் ராணி வீட்டின் அருகில் அவரது உறவினரான சங்கர் மகன் லோகநாதன் வசித்து வந்தார். இதனால் மகாராணியும், லோகநாதனும் நெருங்கி பழகி வந்தனர். இந்த நெருக்கமான  பழக்கத்தை பயன்படுத்தியும்,  முதலில் காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். அவரது பேச்சில் மயங்கிய மகாராணியை உல்லாசம் அனுபவித்துள்ளார்.

பிறகு கல்யாணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியும் மகாராணியுடன், லோகநாதன் பலமுறை உடலுறவு கொண்டார். இதில் ராணி கர்ப்பமானார். தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த மகாராணியின் அம்மா, அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் , லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 9-ம்வகுப்பு மாணவியை வாலிபர் ஏமாற்றி பலமுறை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.