ஓடிசாவில் சிறுமியை தாயின் கண்முன்னே கற்பழித்திருக்கிறான், அதைத் தடுக்க வந்த அந்த பெண்ணின் தாயையும் வெட்டி கொலை செய்துவிட்டு,  சுமார் ஓரு மாத காலம் தலைமறைவாக இருந்த அந்த கொடூரனை போலீசார் கேரளாவில் கைது செய்துள்ளனர். 

ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த மாதம் 4ஆம் தேதியன்று ஒரு சிறுமியும், தாயும்  உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு இளைஞர்களிடம் உதவி கேட்டாள் அந்த சிறுமி. உடனடியாக இளைஞர்கள் போலீசுக்கு தகவல் சொல்ல, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு கட்டாக்கில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியின் தாயார் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விக்கி என்பவனும், பிஜயா என்பவனும் சேர்ந்து தன்னை பலவந்தமாக கற்பழித்ததாக அந்த  சம்பவத்தை அழுது கொண்டே கூறினார். இதைப் பார்த்து தடுக்க வந்த தனது தாயை வெட்டிக்கொன்றதாகவும் தெரிவித்தார்.  

கடந்த மே 2ஆம் தேதி நள்ளிரவில் பிஜயா தனது கூட்டாளி விக்கியுடன் சேர்ந்து சிறுமியை டியூலி மலைப்பகுதிக்கு தூக்கிச் சென்று போய் கற்பழித்துள்ளான். அதிகாலை வரை இழந்த இருவரும் மாறி மாறி சீரழித்துள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அதை தடுக்க போராடிய சிறுமியின் தாயை கொடூரமாக வெட்டிக்கொன்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் விக்கியை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பிஜயா பெகராவை தேடி வந்தனர். அவனது செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்ததில் அவன் கேரளாவில் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து ஓடிசா போலீசார், விமானம் மூலம் விரைந்து சென்று பிஜயா கைது செய்து அழைத்து சென்றனர்.