பாண்டிச்சேரி பேருந்தில் அரைகுறை அடையில் பெண்ணொருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .சென்னையில் ஏறிய அந்த பெண் பாண்டிச்சேரி வரும் வரை  கட்டுக்கடங்காத அளவிற்கு மது அருந்தியதுடன் , பயணிகளை   ஆபாசமான வார்த்தைகளால்  திட்டியும் கூச்சலிட்டு வந்ததால் சக  பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்றிரவு பாண்டிச்சேரிக்கு சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது ,  பேருந்து புறப்படும் நேரத்தில் அரைகுறை ஆடையுடன் உள்ள ஏறினார் ஒரு இளம்பெண் .  அவர் பேருந்தில் ஏறியதும் சக பயணிகள் முகம் சுளிக்க ஆரம்பித்தனர். காரணம் அவருடையஆடைகள் அந்த லட்சணத்தில் இருந்தது . 

 கிட்டத்தட்ட அந்தப் பெண் நீச்சல் உடையில் வந்திருந்தார் என்றே சொல்லலாம் . அவரின் அங்கங்கள் அத்தனையும் துருத்திக்கொண்டு வெளியில் தெரியும் வகையிலும் இருந்தது ,  காண்போரை சபலப்பட வைக்கும்  வகையிலும் அவரின்  உடைகள் இருந்தது , பேருந்தில் ஏறியவுடன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த அந்த பெண் பேருந்து புறப்படுவதற்கு முன்பாகவே தனது பையில் வைத்திருந்த மதுபாட்டில்களை திறந்த  குடிக்க ஆரம்பித்தார் . அவரின் நடவடிக்கைகள் பேருந்தில் பயணிகளை  அதிர்ச்சி அடைய வைத்தது .  ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறியதும் அந்தப் பெண் வாய்க்கு வந்தபடி சத்தமாக கூச்சலிட ஆரம்பித்தார் .   அவரின் அலப்பறையால்  பொறுமை இழந்த சிலர் அவரை கொஞ்சம் நிதானமாக இருக்கும் படி அறிவுறுத்தினார் .  ஆனால் தனக்கு அறிவுரை கூறியவர்களின்  மீது பயந்து அந்த பெண் அவர்களை கெட்ட கெட்ட வார்த்தைகளில் வசை பாடினார் . ஆளுக்கும் அவரின் பேச்சுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது அந்த அளவிற்கு வக்கரமான வார்த்தைகள் அது.  

ஒரு கட்டத்தில் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் தலையிட்டு அந்தப் பெண்ணை எச்சரித்ததுடன்  அவரை பேருந்திலிருந்து இறக்கிவிட  முயன்றார் ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால் அவரைக் கீழே இறக்கி விடுவது ஆபத்தாக முடிந்துவிடும் ,  ஒரு பெண் என்பதால் அப்படி செய்ய வேண்டாமென சகபயணிகள் தடுத்தனர். ஆனால் அந்தப் பெண் இவை எதையுமே பொருட்படுத்தவில்லை.   தொடர்ந்து குடிப்பதிலே நாட்டமாக இருந்தார் . ஒருபுறம்  அந்தப் பெண்ணின் நடவடிக்கைகள்  எரிச்சலாக இருந்தாலும் வேறு வழியின்றி அந்த பெண்ணின் அலப்பறைகளை சகிக்க முடியாமல்  சகபயணிகள் பல்லைக் கடித்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்தனர் .   ஆனாலும் அந்த பெண் பயணம் முடியும்வரை குடித்துக்கொண்டு அலப்பறை செய்துவந்தார் ,  இந்நிலையில் அப்பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.