தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே இருக்கிறது முத்தனம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் தொந்திக்கவுண்டர். இவரது மகன் ராஜ்குமார்(36). விவசாய வேலைபார்த்து வருகிறார். தினமும் அந்தப்பகுதியில் இருக்கும் வயல்வெளிகளில் கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று வயல்வெளி அருகே ராஜ்மோகன் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது அந்த பகுதியாக ரேவதி(35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண் வந்துள்ளார். இவர் திருமணமாகி கணவருடன் முத்தனம்பட்டியில் வசித்து வருகிறார். அவர் தனியாக வருவதை நோட்டமிட்ட ராஜ்மோகன் ரேவதியை பின்தொடர்ந்துள்ளார். ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து ரேவதியிடம் சில்மிஷத்தில் செய்திருக்கிறார். அதை ரேவதி கண்டிக்கவே, அவரை வலுக்கட்டாயமாக வயல்வெளி இருக்கும் பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளார் ராஜ்மோகன்.

அங்கு வைத்து அவரை ராஜ்மோகன் கற்பழித்துள்ளார். அப்போது வலியால் அலறி கூச்சல் போட்ட ரேவதியை, காம வெறியில் உடலின் பல இடங்களில் ராஜ்மோகன் கடித்திருக்கிறார். பின்னர் அங்கு வாகனங்கள் வரும் சத்தம் கேட்கவே உடனடியாக தப்பி ஓடியுள்ளார். காயங்களுடன் கிடந்த ரேவதி வீட்டிற்கு வந்து தனது கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். ரேவதியின் கணவர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் ராஜ்மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே ரேவதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.