Asianet News TamilAsianet News Tamil

நியாயம் கேட்டப் பெண் வேலையை விட்டு நீக்கம்!! SNS கல்லூரியின் அராஜகம் அட்டூழியம்...

SNS கல்லூரி நிர்வாகி சுப்பிரமணியம்  செக்ஸ் சில்மிஷத்தால் பாதிக்கப்பட்ட பெண், கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து,  பெண் ஊழியரை வேலையை விட்டு நீக்கும் அராஜகத்தில் கல்லூரி நிர்வாகம் இறங்கியது அம்பலமாக்கியுள்ளது.

Women Employee emanated from SNS collage
Author
Coimbatore, First Published Sep 20, 2018, 5:31 PM IST

கோவையை அடுத்த சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி வயது 23. திருமணம் ஆகாத இவர், எஸ்.என்.எஸ். கல்லூரியில் அலுவலக பணியாளராக பணிபுரிந்து வந்தார். கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அதன் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன் (63) அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இளம் பெண்களிடம், சுப்பிரமணியன் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர், வலுகட்டாயமாக செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிலர் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். இவரது சில்மிஷம் தாங்க முடியாது, சிலர் வேலையை விட்டு நின்றும் உள்ளனர்.  

Women Employee emanated from SNS collage

சுப்பிரமணியத்தின் சில்மிஷம் குறித்து, இளம் பெண்கள், சுப்பிரமணியத்தின் மகனும், கல்லூரியின் தலைமை நிர்வாகியுமான நளினிடம்  புகார் கூறியுள்ளனர். செக்ஸ் சில்மிஷம் செய்த கல்லூரி இயக்குனரின் மகன் நளினோ, வெளிநாட்டில் பெண்களை கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் மிகப்பெரிய விஷயம் அல்ல என்று எகத்தாளமாக பேசியுள்ளார். மேலும், புகார் கூற வந்த பெண்களிடம், போய் வேலையைப் பாருங்கள். இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என பெண் ஊழியர்களை மிரட்டியுள்ளார். 

அப்பா செய்த  செக்ஸ் சில்மிஷத்தால், இளம் பெண்கள் கல்லூரி மாணவிகள் சிலர் என  மகன் நளினிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், நளினியின் பேச்சால் மனரீதியாக பாதிக்கப்பட்ட  சில பெண்கள், சுப்பிரமணியத்தின் பாலியல் தொந்தரவுகளை பொறுத்துக் கொண்டு தங்களது குடும்ப வறுமையை  மனதில் வைத்துக் கொண்டு வீளை பார்த்து வந்துள்ளனர்.

Women Employee emanated from SNS collage

இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம், புவனேஸ்வரியை வேலையை விட்டு நிறுத்தியதுடன், அவருக்கு பல்வேறு வகைகளில் தொந்தரவும் கொடுத்து வந்துள்ளார். SNS கல்லூரி நிர்வாகத்தின் அட்டூழியத்தால், பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி, செக்ஸ் சில்டிமிஷம் கொடுத்த நிர்வாக இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவையை அடுத்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios