அலங்காநல்லூரில் நடந்த பைனான்சியர் கொலையில் வெளியான  திடுக்கிடும் தகவல், மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் தொந்தரவு கொடுத்ததால் கூலிப்படையை ஏவி கொன்றேன் என்று 2-வது மனைவி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

அலங்காநல்லூர் அருகே நடராஜன் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன் வட்டி தொழில் செய்து வரும், இவர் கடந்த 31-ந் தேதி மதியம் வீட்டு முன்பு அமர்ந்திருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் அவரைச் சுற்றி வளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் செதில் செதிலாக வெட்டியது.

இதில் படுகாயம் அடைந்த இளங்கோவன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர கொலை குறித்து, இளங்கோவனின் 2-வது மனைவி அபிராமி கொடுத்த புகாரின் பேரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில், அபிராமியே கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொன்றதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அபிராமியை வாக்குமூலத்தில்; தத்தநேரியை சேர்ந்த இளங்கோவனின் முதல் மனைவி இறந்து போன நிலையில் அதே பகுதியை சேர்ந்த அபிராமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடிய அபிராமியை, இளங்கோவன் 4 ஆண்டுகளுக்கு முன் 2வது கல்யாணம் செய்து கொண்டார். மூன்று பிள்ளைகளுடன், இன்னொரு கல்யாணம் செய்ததால் உறவினர்கள் தவறாக பேசுவார்கள் என்று கருதி, அலங்காநல்லூர் அருகே நடராஜ் நகரில் வீடு எடுத்து வாழுந்து வந்துள்ளனர். அப்போது அபிராமியின் மூத்த மகள் அனுசுயாவிடம் இளங்கோவன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த  சில மாதங்களுக்கு முன் அனுசுயா ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மதுரைக்கு சென்று விட்டார். ஆனால், அனுசுயா இருக்கும் இடத்தை அறிந்து மீண்டும் இளங்கோவன் வீட்டிற்க்கே சென்று அத்து மீறியதாக சொல்லப்படுகிறது.

இது பற்றி தனது தாயார் அபிராமியிடம் அனுசுயா அழுது புலம்பி இருக்கிறார். இதையடுத்து இனிமேலும் இளங்கோவனை உயிருடன் இருக்க விடக்கூடாது என்று கருதி, அவரை கொலை செய்ய திட்டமிட்டு கூலிப்படையை ஏற்பாடு செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்த இளங்கோவனை கூலிப்படை கும்பல் வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. இதையடுத்து அபிராபி, அனுசுயா ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய கூலிப்படை கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர்.