7 வயது சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டு இறந்ததாக வதந்தி பரவியதால் ஆத்திரம் அடைந்த ஊர்  மக்கள் கலவரத்தில் ஈடுபட்டடஹால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் தங்கியிருந்தாள். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பிஸ்கட் வாங்க தனது வீட்டுக்கு அருகேயுள்ள கடைக்கு சென்றுள்ளார், அப்போது அந்த வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் அந்த பெண்ணை மடக்கி பேச்சு கொடுத்து தன்னை சிறுமியின் தந்தைக்கு மிக நெருங்கிய நண்பர் என அறிமுகம் செய்துகொண்டார்.  

அப்போது அவளை வீட்டில் கொண்டு விடுவதாக ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் ஏற்றி அமானிசா- நலா என்னும் பகுதியில் அந்த பெண்ணோடு வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனையடுத்து பின்னர் அப்போது இரவு சுமார் 9.30 மணியளவில் அந்த சிறுமியை அவளது வீட்டின் அருகே இறக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.

இதற்கு முன்பாக தனது  குழந்தையை காணோம் என, பிறகு சிறுமியை காணாமல் அவளது பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடி அலைந்தனர். இதற்கிடையே சிறுமி அழுது கொண்டே நடந்து வருவதை பக்கத்து வீட்டுக்காரர் தெரிவித்தார். உடனே அவளை குடும்பத்தினர் ஓடி சென்று மீட்டனர். அப்போது அவளது உடை சேறு சகதியுமாக இருந்தது. அதுமட்டுமல்ல உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. அதை தொடர்ந்து அவளுக்கு ஆஸ்பத்திரியில் முதல் உதவிசிகிச்சை அளிக்கப்பட்டது.

அது குறித்து சாஸ்திரி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததாக வதந்தி பரவியது. இதனால் அந்த பகுதி மக்கள் கொந்தளித்தனர்.  

மேலும், ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் கும்பலாக திரண்டு கலவரத்தில் ஈடுபட்டனர். அங்கு ரோட்டில் சென்ற வாகனங்களையும், வீடுகளையும் அடித்து நொறுக்கினர். இதில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.இந்த சம்பவத்தை தொடர்ந்து சாஸ்திரி நகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தும் கலவரத்தில் ஈடுபட்ட கும்பல் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தியது. கலவரக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி சரி செய்த்தனர். மிதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள அந்த குற்றவாளியை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர் எனக் கூறியுள்ளார்