நேத்து வந்த மாவுதான் சார் இருக்கு, ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். பரவால்ல  கொடுங்கன்னு வாங்கிட்டுப்போன கொஞ்சம் நேரம் கழிச்சு திடீர்ன்னு பைக்குல வந்த ஜெயமோகன், ஏண்டி நாயே தே...மவளே... என்ன மாவடி கொடுத்திருக்கன்னு கேட்டுக்கிட்டே மாவு பாக்கெட்டை தூக்கி என்னோட மூஞ்சில வீசினாரு... 'நீதானே பார்த்து எடுத்துட்டுப்போன? இப்பவந்து இப்படி பேசுற?' ந்ன்னு கேட்டேன். உடனே, தண்ணீர் சொம்பை வேகமாக தள்ளிவிட்டுட்டு உள்ளவந்து என் முடியப்பிடிச்சு இழுக்க முயற்சி பண்ணினாரு... பக்கத்துல இருந்த என்னோட கணவர் அந்தாள நெட்டி தள்ளி அடிச்சிட்டாரு... அந்தாளால எங்க மானமே போயிடுச்சு.

அன்னைக்கு வந்த ஆளு மாவு பிடிக்கல. காச கொடுன்னு கேட்டிருந்தா கொடுத்திருப்பேன். இப்படி அசிங்க அசிங்கமா பேசலாமா? எனக்கு அவரை யார்ன்னுக்கூட தெரியாது. ஆனா, நீங்களே சொல்லுங்க... என் கணவருக்கு அவரைத் தெரியுமாம். தெரிஞ்சிருந்தும் அடிச்சார்ன்னா அதுக்குக்காரணம், ஒரு மனைவியை கண்ணு முன்னாடி அப்படி தரக்குறைவா பேசினா எந்தக்கணவன் தான் பார்த்துக்கிட்டு சும்மா நிற்கமுடியுமா?  என  மாவுக்கடைக்காரர் சம்சாரம் கீதா கண்ணீரோடு சொல்கிறார்.

திமுகவை சார்ந்தவரின் கடைக்கு சென்று,  அவரது சம்சாரத்தின் மூஞ்சில் புளிச்ச மாவை  வீசி  வீசி அடித்துள்ளார் ஜெயமோகன். இதனால் காண்டான  கடைக்காரர் ஜெயமோகனை ரோட்டிலேயே புரட்டி எடுத்துள்ளார். சராசரி மனிதர்கள் எல்லோருமே, தனது மனைவியை ஒருவன் அசிங்க அசிங்கமாக திட்டும்போது இப்படி அடிக்கத்தான் செய்வார்கள்? என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் பொதுவான நெட்டிசன்கள்.

ஆனால், நடந்தாது என்னன்னு கூட தெரியாமல் புளிச்சமாவு ஜெயமோகனுக்காக உதயசூரியன் சின்னத்தில் ஜெயிச்ச விழுப்புரம் எம்.பியும் தி.மு.க.வின் ரவிக்குமார்,  மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசனும், அவசர அவசரமாக ஒரு பெண்ணிடம் அடாவடி செய்த ஜெயமோகனுக்காக வக்காளத்து வாங்கியிருப்பது மட்டுமல்லாமல், போலீசுக்கு பிரஷர் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.

காரணம் கேட்டால் ஒரு எழுத்தாளரை அடிச்சு அட்மிட் பண்ண வச்சிட்டாங்கன்னு சொல்கிறார்கள் இந்த எழுத்தாளர்கள். ஆனால், உண்மை என்னன்னு விசாரிச்சா? கடைக்காரர் செல்வத்தின் சம்சாரம் கீதா நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அட்மிட்டான, ஒன்றரை மணிநேரம் கழித்து தான், திடீரென வந்து அட்மிட் ஆனாராம் புளிச்சமாவு ஜெயமோகன், எழுத்தாளர்கள் எம்.பி. கூட்டாளிகள்  பிரஷரால், கடைக்காரர் செல்வத்தை  போலீஸ் கைது செஞ்ச மேட்டர் தெரிஞ்சதும்  டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டார். 

ஆனால், ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதா தற்போதுவரை  சிகிச்சை பெற்று வருகிறாராம். இதுல இன்னொரு கொடும என்னன்னா? , திமுகவைச் சேர்ந்த கடைக்கார் செல்வத்துக்கு எதிரா கேஸை ஸ்ட்ராங் பண்ண, பெண் எம்பிக்களும், எழுத்தாளர்களுமான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி  உள்ளிட்ட எழுத்தாளர்களை வக்காளத்துக்கு கூப்பிடவும் பிளான் போட்டுள்ளார்களாம்.

புளிச்சமாவு ஜெயமோகனுக்காக பெண் எம்பிக்களிடம் ஆதரவு திரட்டும் விஷயம் தெரிந்த அந்த பகுதியிலுள்ள பெண்கள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி புளிச்சமாவு ஜெயமோகனால் பாதிக்கப்பட்ட கீதாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.