கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில்  திருநங்கைகள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்கள்பனியன் கம்பெனிகளில் பல்வேறு பணிகளில் வேலை பார்த்து வருகின்றனர், ஒரு சிலர் தனியார் நிறுவனங்கள்,கடைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பணம் வசூலித்தும் வருகின்றனர்.

இந்நிலையில்,  கோவை கவுண்டம்பாளையத்தில் புதியதாக தொடங்கப்பட்ட ஒரு தனியார் கம்பெனியில் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு 2 திருநங்கைகள் வந்திருந்தனர். அப்போது அங்கு இருந்த ஒருவரிடம் நீண்ட நேரமாக காசு கேட்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த நபர் காசு கொடுக்காததால், அவரது சட்டையில் கையை விட்டு அவர் வைத்திருந்த 10,000 ரூபாயையும் எடுத்துக்கொண்டார்.  செய்வதறியாமல் திகைத்த அந்த நபர், அந்த திருநங்கையரிடம் அழுதுகொண்டே பணத்தை திருப்பி தருமாறு கெஞ்சிக் கேட்டார். அப்போது அந்த 2 திருநங்கைகள் திடீரென தங்கள் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக நின்றனர். 

திருநங்கைகளின் இந்த செயலைக்கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், முகம் சுளிக்கவும் வைத்தது. ஆனால் அந்த நபர் விடாமல் தனது பணத்தை தருமாறு கெஞ்சிக் கேட்டு கொண்டே இருக்க, கடைசியாக எடுத்த பணத்தை திருநங்கை திரும்ப கொடுத்தனர்.