Asianet News TamilAsianet News Tamil

தனியார் விடுதியில் சுரங்க அறைகள் அமைத்து விபச்சாரம்….. 2 பெண்கள் உட்பட 5 பேர் அதிரடி கைது…!

கர்நாடகா மாநிலம் தும்கூரில் தனியார் விடுதியில் சுரங்க அறைகள் அமைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

tumkur prostitution gang set up tunnel
Author
Tumkur, First Published Sep 22, 2021, 4:23 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கர்நாடகா மாநிலம் தும்கூரில் தனியார் விடுதியில் சுரங்க அறைகள் அமைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு ஆணுறைகள் கொட்டப்பட்டு கிடந்தன. அப்பகுதியில் விபச்சாரக் கும்பல்கள் செயல்படுகிறார்களா., ஆணுறைகளை கொட்டிச் சென்றது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

tumkur prostitution gang set up tunnel

இந்தநிலையில் துமகூரு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேத்தசந்திரா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் விடுதியில் சுரங்க அறை அமைத்து விபச்சாரம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைதத்தது. இதையடுத்து தங்கும் விடுதிக்குச் சென்று போலீஸார் ஆய்வு செய்தபோது அங்கு விபச்சாரம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை. ஆனாலும் விடுதியை சல்லடை, சல்லடையாக போலீஸார் சோதனையிட்டபோது அங்கு யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையி சுரங்க அறைகள் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபப்ட்டது. சுவற்றோடு ஒட்டிப்போடப்பட்ட மர மேஜையை அகற்றிய போலிஸார் சுவற்றை தட்டிப்பார்த்த போது அங்கு கதவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

tumkur prostitution gang set up tunnel

ஒரு நபர் மட்டுமே குனிந்து செல்லும் வகையில் அந்த கதவு வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலீஸார் பிரம்மிப்பிற்கு உள்ளாகின்ர். இதையடுத்து சுரங்க அறையை சோதனையிட்ட போலிஸார் அதற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களை மீட்டனர். மேலும் பாலியல் தொழில் நடத்திய 3 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

tumkur prostitution gang set up tunnel

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் இருவரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தேசிய நெடுஞ்சாலையில் ஆணுறைகளை கொட்டியது இந்த விபச்சாரக் கும்பல்தானா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கும் விடுதியில் சுரங்க அறை அமைத்து பாலியல் தொழில் நடைபெறும் நிகழ்வு கர்நாடக போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios