Asianet News TamilAsianet News Tamil

99 பேருக்கு வாழ்க்கையே போச்சு...!! வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு...!!

இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்த டிஎன்பிஎஸ்சி சந்தேகத்துக்கிடமான அத்தனை பேரையும் சென்னைக்கு வரவழைத்து பல கட்டங்களாக விசாரணையை நடத்தியது .  

tnpsc life time ban to 99 examiner's regarding exam forgery
Author
Chennai, First Published Jan 24, 2020, 5:51 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிசி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது . அவர்கள் அனைவரும்  முறைகேட்டில்  ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிசி இந்த அதிரடி  நடவடிக்கையை எடுத்துள்ளது .  அரசு பணியில் சேர்வதற்கு பல லட்சம் பேர் பல நாட்கள் உழைத்து படித்து  கடுமையாக போராடி வருகின்றனர்  .ஆனால்  சிலரோ குறுக்கு வழியில் தேர்வில் வெற்றி பெற்று வேலையில் சேர்ந்து விடுகின்றனர் ,  இது போன்ற குற்றங்கள்  உண்மையாக உழைக்கும் மாணவர்கள்  மத்தியில் போட்டித் தேர்வுகள் மீது  அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது .

tnpsc life time ban to 99 examiner's regarding exam forgery 

இந்நிலையில் ,  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் , கீழக்கரை அருகே 2 மையங்களில் தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈருபட்டிருப்பது தெரியவந்துள்ளது.   மேற்கண்ட இரண்டு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் மட்டும்  அதிக மதிப்பெண்கள் எடுத்து  தேர்வானது சந்தேகத்தை ஏற்படுத்தியது,  முதல் 100 இடங்களில்  இங்கு  தேர்வெழுதிய  39 பேர் இடம் பெற்றுள்ளனர் .  இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்த டிஎன்பிஎஸ்சி சந்தேகத்துக்கிடமான அத்தனை பேரையும் சென்னைக்கு வரவழைத்து பல கட்டங்களாக விசாரணையை நடத்தியது .  அதில் அவர்களுக்கு தனி தேர்வும்  நடத்தப்பட்டது .  பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது .

 tnpsc life time ban to 99 examiner's regarding exam forgery

பின்னர் அது தொடர்பாக நடந்த விசாரணையில்  ராமேஸ்வரம் ,  கீழக்கரை ஆகிய இரண்டு தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது ,  இந்த வழக்கில் ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி ,  மற்றும் கீழக்கரை தாசில்தார் வீரராஜா உள்ளிட்ட 12 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 99 பேரும்  இனி வழ்நாள் முழுக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாது என வாழ்நாள் தடை விதித்தது தமிழ்நாடு அரசுபணியாளர்கள்  தேர்வாணையம் அதிரடியாக அறிவித்துள்ளது .  இதனால் 99 பேரின் எதிர்காளம் கேள்விக்குறியாகி உள்ளது,  எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த முறை நடந்த குரூப் 4 தேர்வு 20 லட்சம் பேர் எழுதினார்கள் மாநில அரசு பணிக்காக இவ்வளவு பேர் தேர்வு எழுதியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios