இதுதான் "உண்மையான பிரேக்கிங் நியூஸ்"...! மிகுந்த வரவேற்பில் மக்கள்...! 

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவத்திற்கு நாடு முழுக்க பெரும் ஆதரவு கிடைத்து உள்ளது 

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை லாரி ஓட்டுனர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். இக்கொடூர கொலை வழக்கில் லாரி ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது

இது தொடர்பபான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்ற போது அவர்கள் 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். அதாவது விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே நான்கு பேரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் என்கவுண்ட்டர் செய்ததற்காக சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரை மக்கள் வெகுவாக பாரட்டி வருகின்றனர். ஏற்கனவே இவர் பணியாற்றிய இடங்களில் அதிரடி கமிஷனர் என்ன பெயர் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2008 ஆம் ஆண்டு வாரங்கல் எஸ்பி ஆக இருந்தபோது ஆசிட் வீச்சில் குற்றம்சாட்டப்பட்ட இருவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றவர் சஜ்ஜனார், என்பதால் இவரை போலீஸ் வட்டாரத்தில் என்கவுண்டர் போலீஸ் என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில், நால்வர் மீதான  என்கவுண்டர் செய்தி வெளியான அடுத்த தருணமே... இதுதான் உண்மையில் பிரேக்கிங் நியூஸ் என சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் ஓர் உணர்வு ஏற்பட்டு உள்ளது. காரணம்... இது போன்ற பல சம்பவங்கள் நடந்து, ஒரு வாரம் காய் பற்றியே பேசி, குற்றவாளிகளை ஜெயிலில் அடைத்து பின்னர் பல போலீசார் பாதுகாப்புடன் அவர்களை நீதிமன்றம் அழைத்து வருவது... பிறகு அவர்கள் பெரிய ரவுடி என்ற பெயரில் ஜாமீனில் வெளிவந்து உலா வருவது இதுதான் வழக்கம்.. பாதிக்கப்பட்ட நபர்கள் எத்தனையோ பேர்இன்றளவும் நீதி கிடைக்க போராடி வருகின்றனர். 

இந்த ஒரு நிலையில் பெண் மருத்துவருக்கு ஏற்பட்ட நிலைமைக்கு உடனடி தீர்வு எதிர்பார்த்த இந்த நிலையில், 4 பேரை என்கவுண்டர் செய்வததற்கு அனைவரது மத்தியிலும் வரவேற்பு கிளம்பியதுடன், இதுதான் உண்மையில் பிரேக்கிங் நியூஸ் என ஒரு சிந்தனை கிளம்பி உள்ளது