பொள்ளாச்சி கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கூட்டாளிகள் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் கைதான நிலையில் திருநாவுக்கரசும் தற்போது பிடிப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படித்து வரும் ரிஷ்வந்த், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக்கில் நண்பராகப் பழகி வந்துள்ளான் ரிஷ்வந்த் கடந்த வாரம் அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளான் ரிஷ்வந்த். கடந்த 12-ம் தேதி அப்பெண்ணை ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காகக் காத்திருக்குமாறு அவன் தெரிவித்துள்ளான். வசந்தகுமார், சதீஸ், திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த ரிஷ்வந்த், மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

 

நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்து விட்டு, எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். புகைப்படத்தை மாணவியிடம் காட்டி பாலியல் உறவுக்கு இணங்குமாறும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர். காரில் சத்தம் போட்டதால் மாணவியை பெரியாக்கவுண்டனூர் அருகே இறக்கி விட்டு,  நகையை பறித்துக் கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும், அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். தாங்கள் சொல்வதைச் செய்ய மறுத்தால் மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்அப்லோடு செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். 

இவர்கள் தொடர்ந்து  கொடுத்துவந்த செக்ஸ் மிரட்டலைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய காவல்துறை ரிஷ்வந்த், வசந்த், சதீஸ் ஆகிய மூவரையும் காருடன் கைது செய்துள்ளனர், தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைத் தேடி வந்தனர். கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்களில் காத்திருந்தது பெரிய ஷாக்,  ஆமாம் இளம் பெண்கள், கல்யாணமான இல்லத்தரசிகள் என  200-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோகள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரிக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என இந்த பாரபட்சம் பார்க்காமல் மிரட்டி பணம் சம்பாதித்தும் சில பெண்களை உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளது தெரியவந்துள்ளது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக  பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்களை மட்டும் இந்த கும்பல் குறிவைத்து மிரட்டியது விசாரணையில் தெரிவந்தது. 

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் திருநாவுக்கரசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இவரை கைது செய்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் திருநாவுக்கரசு, இந்த குற்றச்சாட்டில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் நேற்று தனது 2வது வீடியோவை வெளியிட்டார். அதில் நான் திரு பேசுறேன். எவ்வளவு நாளுதான் நான் இப்படியே சுத்திட்டிருக்கிறதுனு தெரியல. இன்று நான் பொள்ளாச்சி வாரேன். கண்டிப்பாக என்னை போலீஸ் அரெஸ்ட் பண்ணிருவாங்க என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.