சபரிராஜனிடம் உள்ள பல காதலிகளை ஒவ்வொருவராக அழைத்து உல்லாசமாக இருந்து வந்தோம். சிலர் முரண்டு பிடித்தனர். அவர்களைத்தான் அடித்து, உதைத்து, பணம் பறித்து வந்தோம் என பல ரகசியங்களைக் கூறியுள்ளான் செக்ஸ் பிசாசு திருநாவுக்கரசு.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து, அவர்களை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டு, தற்போது கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில். கைதான திருநாவுக்கரசை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்தது சிபிசிஐடி தரப்பு.   திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.  

சபரிராஜனிடம் உள்ள பல காதலிகளை ஒவ்வொருவராக அழைத்து உல்லாசமாக இருந்து வந்தோம். சிலர் முரண்டு பிடித்தனர். அவர்களைத்தான் அடித்து, உதைத்து, பணம் பறித்து வந்தோம். அப்போது எங்கள் கும்பலில் உள்ள ஒருவரின் தங்கையையும், சபரிராஜன் காதலித்துள்ளார். அவரையும் ஒருநாள் எங்கள் பண்ணை வீட்டுக்கு எங்களது மிரட்டலுக்கு பயந்து அழைத்து வந்தார். எங்களைப் பார்த்தவுடன் நண்பரின் சகோதரி, கண்டுபிடித்து விட்டு ஓடிப்போய் நண்பரிடம் கூறிவிட்டார். இதனால் நண்பனும் அவனது உறவினர்களும் சேர்ந்துதான், சபரிராஜன், சதீஷ்,வசந்தகுமார், மணிகண்டன் மற்றும் என்னையும் தூக்கிக் கொண்டு போய் அடித்து உதைத்தனர்.

பின்னர் செல்போனை பறித்துக் கொண்டனர். எங்களை அடிப்பதை வீடியோவும் எடுத்தனர். பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். 3வது முறையாக போலீசில் மாட்டினோம். இதற்கிடையில் இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்து பத்திரிகையில் வந்தது.இதனால் போலீசார் என்னையும், மணிகண்டனையும் விடுவித்து விட்டனர். மற்ற 3 பேரையும் சிறையில் அடைத்தனர். நான் திருப்பதி, சேலம் ஆகிய இடங்களுக்கு சுற்றினேன் பின்னர் போலீசார் கைது செய்தனர்.