பள்ளியில் உனக்கு இடமில்லை.. டிசி வாங்கிக்கோ...! மாணவன் தற்கொலைக்கு பின் உள்ள பகீர் பின்னணி..! திருச்சியில் பரபரப்பு..!  

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள செல்லம்மாள் சிபிஎஸ்இ பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரவீனை பள்ளி நிர்வாகம் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சியை சேர்ந்த துரைராஜ் வாசுகி தம்பதியினருக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்ற மகன் உள்ளார். தந்தை மலேசியாவில் வேலை செய்து வரும் நிலையில் வாசுகியின் கவனிப்பில் பிரவீன் வளர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றதால் மற்ற மாணவர்கள் முன் ஆசிரியர்கள் கண்டித்து உள்ளனர். அப்போது ஒரு மாணவி கேலி செய்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரவீன் அந்த மாணவியிடம் சற்று கோபப்பட்டு கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மாணவர் பிரவீனை 10 நாள் சஸ்பெண்ட் செய்துள்ளது பள்ளி நிர்வாகம். அதன் பின்னர் 10 நாட்கள் கழித்து மீண்டும் பள்ளிக்குச் சென்ற பிரவீன் நார்மலாக வகுப்பறைக்கு செல்ல முடியும் என்ற எண்ணத்தில் சென்றுள்ளார்.

ஆனால் அவரை மேலும் இரண்டு நாட்களுக்கு காத்திருப்பு அறையில் அமர வைத்து வகுப்பறையில் அனுமதிக்காமல் இருந்துள்ளனர். மேலும் அவருடன் படித்த சக மாணவர்கள் அவ்வழியாக  வரும் போதும், போகும் போதும் கேலி கிண்டலுமாக பேசி உள்ளனர். இதற்கிடையில் ப்ரவீனுக்கு செல்லம்மாள் பள்ளியில் இடமில்லை என்றும் டிசி வாங்கிக்கொண்டு செல்லுமாறு தெரிவித்து உள்ளனர். செய்வதறியாது திகைத்த பிரவீன் மன உளைச்சல் அடைந்து  இரண்டு நாட்களாக தன் தாயுடன் கூட சரிவர பேசாமல் கவலையாக இருந்துள்ளார். மேலும் பள்ளி  நிர்வாகமும் டிசி வாங்கி செல்லுமாறு கட்டாயப்படுத்தி உள்ளதாக பிரவீன் தாய் மற்றும் உறவினர்கள் தெரிவித்து உள்ளார். 

இந்த நிலையில் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்ட பிரவீன் வீட்டிற்கு சென்று தாய் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்  நிலையத்தில் புகார் அளித்தும் எனதா நடவடிக்கையு எடுக்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனி பிரிவிற்கும், மாவட்ட கண்காணிப்பாளருக்கும் மனு அளித்து தன் மகனின்  இறப்பிற்கு நியாயம் கிடைக்குமா என மனதுடைந்து  காணப்படுகின்றனர். 

பள்ளி நிர்வாகம் மாணவர்களாயின் மன நிலைமை புரிந்துகொள்ளாமல் அளவுக்கு அதிகமான  கெடுபிடி காட்டியதால் ஓர் உயிர் பிரித்துவிட்டதே என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.