சென்னையில் தெலங்கானாவை சேர்ந்த இளைஞர்கள் - பஸ் டிரைவர்கள், நடத்துநர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கூடைபந்து விளையாட்டு வீரர்கள், சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பயிற்சிக்கு வந்துள்ளனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் ஆலந்தூர் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்களில் ஒருவர் நடத்துநரின் காலை தவறுதலாக மிதித்துள்ளார். அதற்கு நடத்துநர் ஏதோ கூற, மொழி புரியாததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் கைக்கலப்பாக மாறிய நிலையில், இளைஞர்கள் பேருந்து நடத்துநர் மற்றும் டிரைவரை தாக்கினர். இதனால், பேருந்து நடு வழியில் நிறுத்தப்பட்டது. நடத்துநர் - டிரைவர்கள் இளைஞர்களை பதிலுக்கு தாக்க கடும் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் இளைஞர்களை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் போக்குவரத்தும் சில நேரம் பாதிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் திண்டுக்கல்லில் ஒரு பயணியை அரசுப்பேருந்து நடத்துநர்கள் முற்றுகையிட்டு கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.