Asianet News TamilAsianet News Tamil

600 பெண்களை நிர்வாணமாக்கி...வீடியோ எடுத்து... சென்னை இளைஞர் செய்த பகீர் லீலைகள்..!

600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்றதாக சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

techie held for cyber bullying online harassment
Author
Tamil Nadu, First Published Aug 24, 2019, 3:21 PM IST

600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்றதாக சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் கடந்த ஏப்ரல் மாதம், தனக்கு வேலை தருவதாகக் கூறி பேசி மயக்கி நிர்வாணப் புகைப்படங்களை பெற்றதாக சென்னையைச் சேர்ந்த ஆண் மீது காவல்துறையில் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். 5 மாத தீவிர தேடுதல் மற்றும் விசாரணைக்குப் பின்னர் சென்னையைச் சேர்ந்த 33 வயதான சாப்ட்வேர் எஞ்சினியர் க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.techie held for cyber bullying online harassment

சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் க்ளெமெண்ட் ராஜ் செழியன் என்ற பிரதீப். இவரது மனைவியும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவிக்கு பகல் நேரத்தில் வேலை, செழியனுக்கு இரவு நேரத்தில் வேலை. இதனால், பகல் நேரத்தில் பொழுதுபோகாததால், செழியன் போலியான வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.techie held for cyber bullying online harassment

பிரபல நிறுவனம் ஒன்றின் ரிசப்ஷனிஸ்ட் ஆக பணியாற்ற பெண்கள் தேவை என்று தனது நிறுவனம் மூலம் செழியன் விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி நாடு முழுவதிலும் இருந்து பல பெண்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களின் போன் நம்பரைப் பெற்று பிரதீப் என்ற பெயரில் செழியன், நேர்காணல் செய்துள்ளார்.

பின்னர், அவர்களிடம் நிறுவனத்தின் பெண் HR தங்களிடம் பேசுவார் என்று கூறி, வேலை உறுதியாகக் கிடைக்கும் ஆனால் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று நம்பிக்கை தரும் விதமாக செழியன் பேச்சை அந்தப் பெண்களும் நம்பியுள்ளனர். பின்னர், அந்தப் பெண்களை தொடர்பு கொண்டு நைசாக பேசி மயக்கி, வேலை உறுதியாக கிடைக்கும் நல்ல சம்பளம் என்று வார்த்தைகளில் தேனொழுகப் பேசி, அவர்களிடமிருந்து நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுள்ளார். செழியனின் பேச்சில் மயங்கிய பெண்களும் அவர்களது புகைப்படங்களை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, அடுத்தகட்டமாக நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியீடுவேன் என கூறி அவர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு, ஆடைகளைக் கழற்றுமாறு மிரட்டி அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதுமட்டும் அல்லாது அவர்களிடம் இருந்து பணமும் பெற்றுள்ளார். இப்படி அவர் 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்களை செழியன் பேசி ஏமாற்றி நிர்வாணப்புகைப்படங்களைப் பெற்றுள்ளார்.techie held for cyber bullying online harassment

செழியனிடம் சிக்கிய பெண்களில் 60 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சிலரே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தமிழக பெண்களை செழியன் பெரும்பாலும் தேர்வு செய்யவில்லை. ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது.

கடந்த ஓராண்டாக இந்த மோசடி செயலில் ஈடுபட்டுவந்து தற்போது சிக்கிய செழியனிடம் இருந்து 2 செல்போன்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். செல்போன்களை தடவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், செழியனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios