ஆசிரியர் ஒருவர், டியூஷன் படிக்க வந்த மாணவியிடம் ஆபாச படம் காட்டி செக்ஸ் கண்ட இடத்தில் கை வைத்து, செக்ஸ் சில்மிஷம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டம் அருகே உள்ள இடைக்கோடு பிலாங்காலைச் சேர்ந்த வில்ஸ்,  வில்சுக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர், இவர் கல்லுப்பாலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இவர் பள்ளி அருகே தனியாக டியூசன் நடத்தி வந்தார். பள்ளி முடிந்ததும் மாலையில் டியூசன் சென்டருக்கு சென்று வகுப்புகள் நடத்தினார். டியூசன் சென்டரில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டியூசன் சென்டரில் ஆசிரியர் வில்ஸ் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். வகுப்புகள் முடிந்ததும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை மட்டும் இருக்கச் சொல்லி விட்டு மற்ற மாணவிகளை அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினார்.

தனியாக இருந்த அந்த மாணவியை தன் அருகே அழைத்த ஆசிரியர் வில்ஸ், தனது செல்போனில் வைத்திருந்த செக்ஸ் வீடியோக்களை காட்டியுள்ளார், பின்னர் அந்த மாணவியை கண்ட இடத்தில் கைவைத்து செக்ஸ் சில்மி‌ஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் ஆசிரியரிடமிருந்து தப்பி சென்ற அந்த மாணவி நேராக வீட்டுக்கு சென்றார்.

பின்னர் தந்து பெற்றோரிடம் டியூசனில் ஆசிரியர் வில்ஸ், ஆபாச படங்களை காட்டி செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதை கூறி மேலும் அழுதுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோரும், உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் திரண்டு வில்சை தேடி அவரது டியூசன் சென்டருக்கு சென்றனர். அதற்குள் தகவலறிந்த ஆசிரியர் வில்ஸ் அங்கிருந்து தப்பி மாயமாகியுள்ளார்.

இதனால் மாணவியின் பெற்றோர் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஆசிரியர் வில்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வில்ஸ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே வில்சின் நெருங்கிய உறவினர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.