பள்ளியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்..! பதறிய மாணவ மாணவிகள்..!
சென்னை நீலாங்கரையில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நீலாங்கரையில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் இன்று காலை அந்தோணி என்ற ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த காட்சியை அங்குள்ள மாணவ மாணவிகள் நேரடியாக பார்த்துள்ளனர். ஆசிரியர் திடீரென தூக்கில் தொங்கிய இந்த காட்சியை பார்த்த மாணவ மாணவிகள் கதறி அழுதபடி மற்ற ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும், உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எதற்காக ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் ? அவருக்கு பணி நிமித்தமான மன அழுத்தமா ? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது