கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருப்பதற்காக மனைவியைக் கொன்று தற்கொலை என்று நாடகமாடிய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தேனி மாவட்டம் போடி நாயக்கனுார் புதுகாலனி ஜெயம் நகரைச் சேர்ந்தவர்கள் ராணுவ வீரர் முனீ்ஸ்வரன் - சுப்புலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் முனீஸ்வரன் ராணுவத்தில் பணியாற்றியதால் அந்த நகரில் உள்ள ராணுவக் குடியிருப்பில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அங்குள்ள மற்றொரு ராணுவ வீரரின் மனைவிக்கும் முனீஸ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால், மனைவி மீது முனீ்ஸ்வரனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;-  மனைவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறல்... 2 பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த கணவன்..!

காலபோக்கில் கணவனின் கள்ளக்காதல் மனைவிக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் நடைபெற்று வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தனது கள்ளக்காதலுக்கு மனைவியும் குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக எண்ணிய முனீஸ்வரன் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதுதொடர்பாக மாமனார், மாமியாரிடம் கணவரின் நடத்தை பற்றி கூறியுள்ளார். அதுவும் பலனில்லை. 

இதையும் படிங்க;-  ஆபாச வீடியோ பார்த்து அதே மாதிரி பண்ண சொன்ன மனைவி... காமவெறியால் பலரிடம் உல்லாசம்.. அதிர்ந்துபோன கணவர்..!

பின்னர், நாளுக்கு நாள் முனீஸ்வரன் குடும்பத்தினர் சுப்புலட்சுமியை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளனர். குழந்தை பள்ளி படிப்பு மற்றும் குடும்பல செலவுக்கு கூட காசு கொடுக்காமல் சித்தரவதை செய்து வந்தனர். இவர்களது கொடுமை தாங்க முடியாமல் தாய் வீட்டிற்கு செல்லவும் மறுத்து விட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முனீஸ்வரன் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். அப்போது, வந்த மறுநாளே கணவர் வீட்டில் சுப்புலட்சுமி தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..!

இதனையடுத்து, பிரேத பரிசோதனை அறிக்கையில்  சுப்புலட்சுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து கணவர் முனீஸ்வரனைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது சுப்புலட்சுமியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து இதற்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.