பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்திருக்கும் காலமிது. குடும்ப சூழ்நிலை காரணமாக பணிக்கு வரக்கூடிய பெண்களுக்கு அங்கு நடக்கும் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள், மிகப்பெரிய அளவிலான பிரச்சனையாக இருக்கிறது. சமீபத்தில் கூட கோவை எச்.என்.எஸ் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் தந்த பாலியல் ரீதியான தொல்லைகள தாங்க முடியாமல் அங்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

"

எஸ்.என்.எஸ் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் 64 வயதான சுப்பிரமணியம். இவர் அந்த கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு தான் தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்திருக்கிறார். இந்த பிரச்சனை குறித்து அந்த பெண்ணும் ஏற்கனவே சுப்பிரமணியத்தின் மகனிடம் பேசி இருக்கிறார் . ஆனாலும் அவரது மகன் பொறுமையாக இருக்கும்படி கூறி இருக்கிறாரே தவிர எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் தன்னை காத்து கொள்ளும் முயற்சியில் அந்த பெண் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

"

இந்த வீடியோ ஆதாரம் சர்ச்சையை கிளப்பியதை தொடந்து சுப்பிரமணியத்தின் மகன்” அந்த வீடியோவில் இருப்பது வேறு யாரோ என கூறுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறி இருக்கிறார். இதனை அவர்களுக்கு இடையே நடந்த வாட்ஸ் ஆப் உரையாடல் குறித்த ஆதாரம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

இந்த உரையாடலின் போது அந்த பெண் “சார் இவ்வளவு நாளும் உங்கலை நம்பி தான் எம்.டி கொடுத்த டார்ச்சரை வெளியில் சொல்லாமல் இருந்தேன். நேத்து கூட இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லைனு நீங்க சொல்ல சொன்னீங்க. 

எனக்கு ஏதாவது ஆச்சுனா நீங்களும் எம்.டி சாரும் தான் காரணம். என்னால முடியல. நான் இருக்குறது பிரயோஜனம் இல்ல” என தெரிவித்திருக்கிறார். அதற்கு பதிலளித்திருக்கும் எம்.டி-ன் மகனும் “இத்தனை நாளும் இப்படி ஒரு விஷயத்தை என்கிட்ட நீங்க சொன்னது இல்லை. நான் உங்கள இப்படி செய்ய சொன்னதும் இல்ல. 

கொஞ்ச நாட்கள் முன்னாடி உங்க கிட்ட பேசினப்போ கூட இங்க வேலை பாக்குறது உங்களுக்கு சந்தோஷம்னு தான் சொன்னீங்க. எது எப்படியோ தனியா வந்து என்னை பாருங்க. என்னால முடிஞ்ச முடிவை நான் எடுக்குறேன்” என தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த பெண் மெசேஜ் அனுப்பி இருப்பது தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் அதில் அவர் தெரிவித்திருக்கிறார்.