கல்லூரி மாணவியை உல்லாசம் அனுபவித்து, அதை செல்போனில் வீடியோ எடுத்துகொண்டு கடநத 4 ஆண்டுகளாக மிரட்டியே, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தும், கரு கலைத்தும் மீண்டும் மீண்டும் உல்லாசம் அனுபவித்த சம்பவம் ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு, காந்தி நகரைச் சேர்ந்த அந்த மாணவி தீபா( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), திண்டல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில்தான், கல்லூரிக்கு வெளியில் அமைந்துள்ள டீ கடைக்கு சென்று வந்தபோது, மாணவி தீபாவுக்கு,  ராதாகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணமான ராதாகிருஷ்ணன் விஷயம் மாணவிக்கு தெரிந்திருந்தாலும்,  அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மாணவியின் பிறந்த நாளன்று, இருவரும் ஏற்காடு சென்றுள்ளனர். ஏற்காடு செல்லும்போது, காரில் சென்றபோதே, செல்போனில் ராதாகிருஷ்ணன், ஆபாசப்படங்களை மாணவிக்கு காட்டி,  உணர்ச்சிகளை தூண்டியுள்ளார். 

அப்போது, மாணவியுடன், சில்மிஷ வேலைகளை செய்து அதை செல்போனில் ரகசியமாக வீடியோவாகவும் எடுத்துள்ளார் ராதாகிருஷ்ணன். ஏற்காடுக்கு சென்று ஜாலியாக சுற்றித் திரிந்த அவர்கள் மீண்டும் ஈரோடு திரும்பினர்.   

ஊர் திரும்பியதும், தன்னுடன் உல்லாசமாக இருக்காவிட்டால், இந்த சில்மிஷ வீடியோக்களை, இணையதளத்தில் வெளியியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி தீபா, ஈரோடு பேருந்துநிலையம் அருகேயுள்ள லாட்ஜுக்கு சென்றுள்ளார். அங்கு ராதாகிருஷ்ணன் அந்த மாணவியொடு உல்லாசம் அனுபவித்து அதையும், ரகசியமாக வீடியோவாக எடுத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து, ராதாகிருஷ்ணன் அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக மாணவியை தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், மாணவிக்கு நான்கு முறை கருக்கலைப்பும் நடந்துள்ளது. ஆனால், மாணவியின் செயல்பாடுகளில் மாற்றத்தை கவனித்த அவரது, பெற்றோர் இது குறித்து கேட்டனர். தனது பெற்றோரிடம் நடந்த உண்மையை மாணவி சொல்ல, அவரது பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.