அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை… வட்டார கல்வி அலுவலர் மீது பாய்ந்தது நடவடிக்கை..!
நீங்கள் எனக்கு எட்டாக்கணியாக இருக்கிறீர்கள்… கணவன் இல்லாமல் எப்படி வசிக்கீறீர்கள் என பாலியல் சீண்டல்களை அரங்கேற்றியுள்ளார் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார்.
நீங்கள் எனக்கு எட்டாக்கணியாக இருக்கிறீர்கள்… கணவன் இல்லாமல் எப்படி வசிக்கீறீர்கள் என பாலியல் சீண்டல்களை அரங்கேற்றியுள்ளார் வட்டார கல்வி அலுவலர் அருண்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்வி மாவட்டத்தில் செயல்படும் அரசுப் பள்ளிகளின் மூன்று தலைமை ஆசிரியைகளுக்கு வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியைகள் வேடசந்தூர் கல்வி மாவட்ட அதிகாரி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்திருந்தனர்.
அதில், வட்டார கல்வி அலுவலரான அருண்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்ய செல்லும் போதெல்லாம் அவர் தவறான நோக்கத்துடன் பேசியதாக கூறியுள்ளனர். கணவனை இழந்த தலைமை ஆசிரியரிடம், துணை இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள் என்றும், அறிக்கை கொடுக்க வரும் தலைமை ஆசிரியைகளை நாற்காலியில் அமர வைத்து நீங்கள் எனக்கு எட்டாக்கணியாக உள்ளீர்கள் என்றும் தமது லீலைகளை அருண்குமார் அரங்கேற்றியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸாப் மூலம் தவறான குருஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்ததாகவும், அருண்குமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தலைமை ஆசிரியைகளிடம் வட்டார கல்வி அலுவலர் அத்துமீறியது உறுதியானது. இதையடுத்து அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அருண்குமார் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. குழந்தைகளுக்கு நல் ஒழுக்கங்களை போதிக்க வேண்டிய கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.