40 வயதாகும் பெண் அதிகாரி  சத்தியா பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த சமயத்தில், இளைஞர் ஒருவர் அந்த பெண் அதிகாரி மீது கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம் செய்தது மட்டுமல்ல, மச்சான் வாங்கடா என்ஜாய் பண்ணலாம் நண்பர்களுக்கும் போன் போட்டு வரவழைத்துள்ளார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூரை சேர்ந்தவர்  சத்தியா( பெயர் மாற்றம் ). வயசு 40 ஆகிறது. இவர் துறையூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். 

வழக்கமாக அரசு பஸ்ஸில்தான் வேலைக்கு போய் வருவார். அப்படித்தான் சம்பவத்தன்று பஸ்ஸில் சத்தியா வந்துகொண்டிருந்தார். அப்போது கீழக்குன்னுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் சத்தியாவை பார்த்ததும் பக்கத்தில் போய் நின்று கொண்டார். பிரசாந்துக்கு வயசு 21. கொஞ்ச நேரத்தில், கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம் செய்ய ஆரம்பித்தார். 

அப்போது சத்தம் போட்டால் தப்பித்துவிடுவான் என்பதால்,  அமைதியாக இருந்துள்ளார் பெண் அதிகாரி சத்தியா,   சத்தியா சைலண்ட்டாக இருப்பதைப்  பார்த்த பிரசாந்துக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தான் பெற்ற இன்பத்தை, தன்னுடைய நம்பர்களும் அனுபவிக்கட்டும் என்ற  எண்ணத்தில் உடனே போன் போட்டு உடனே தன்னுடைய நண்பர்களான பெரியண்ணன், பாரத்திடம் மச்சான் வாங்கடா என்ஜாய் பண்ணலாம் செம ஆண்டி சிக்கியிருக்கு சீக்கிரம்  கோட்டாத்தூர் பஸ் ஸ்டாப்பில் வந்து நில்லுங்கடா என சொல்லி உள்ளார். 

அதற்குள்  சத்தியா இறங்க வேண்டிய கோட்டாத்தூர் ஸ்டாப்பும் வந்துவிட்டதால், பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிவிட்டார். அவருடன் பிரசாந்தும் இறங்கினார். நண்பன் சொன்னதைப்போலவே 2 நண்பர்களும் அங்கு ரெடியாக நின்று கொண்டிருந்தனர். இப்போது 3 பேராக சேர்ந்து  சத்தியா பின்னாடியே போனார்கள். 

இதுகுறித்து  சத்தியா செல்போனில் துறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் சொன்னார். இதையடுத்து, போலீசாரிடம் வசமாக சிக்கினான் பிரசாந்த் போலிஸைப் பார்த்ததும் 2 நண்பர்களான  பெரியண்ணன், பரத் தெறித்து ஓடி விட்டனர். நண்பனை விட்டு விட்டு எஸ்கேப்பான அந்த உயிர் நண்பர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.