தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் உடன் இருந்த உல்லாசப் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டிய நபர் மீது நடிகை நிலானி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  அவரின் புகாரை விசாரித்த போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சின்னத்திரையில் பல்வேறு தொடர்களில் நடித்தவர்  நிலானி,  சீரியல் நடிகையான இவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் உடையில், அரசையும் , காவல் துறையையும் தரக்குறைவாக விமர்சித்தார் எனபதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்து அதில் பிரபலமானார் நிலானி.  ஏற்கனவே நிலானிக்கு திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர்  கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த  நிலையில் கடந்த  ஆண்டு நிலானியுடன்  திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த காந்தி என்பவர், நிலானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர்  தனியாக இருந்து வந்த நிலானிக்கும் வெளிநாட்டில் வேலை செய்து வந்த மஞ்சுநாதன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.  அதில் மஞ்சுநாதன்,  தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், எனவே திருமணம் செய்துகொள்வதாக  நிலானியிடம் கூறி  அவருடன் நெருக்கமான இருந்ததாக தெரிகிறது. இந் நிலையில் அவருக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்து வந்த மஞ்சுநாதனுக்கும் நிலானிக்கும் இடையே திடீரென்று  கருத்து வேற்பாடு எற்பட்டு,  அவருடன் இருந்து நிலானி விலகினார். ஆனால் மஞ்சுநாதன் தொடர்ந்து அவரை விரட்டியதால் அவர்மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் நிலானி. அதில்,  வெளிநாட்டில் வேலை செய்யும் மஞ்சுநாதனுக்கும்  தனக்கும் இடையே நட்பு இருந்ததாகவும்,  ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மஞ்சுநாதன் விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் அவரைப்பற்றி விசாரித்ததில்  அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் இருப்பது பின்னர் தெரியவந்தது என்றும். எனவே அவரை விட்டுத் தான் விலகமுயன்றபோது , அவர் தன்னை விட மறுப்பதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என வற்புறுத்துவதாகவும், அப்படி இல்லை என்றால் தன்னுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை நெட்டில் லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். எனவே மஞ்சுநாதனிடமிருந்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தன் புகாரில் நிலானி தெரிவித்திருந்தார். பின்னர் அந்த புகார் மனுவை விசாரித்த  போலீசார் புகாரில் உண்மை இருப்பதை தெரிந்து மஞ்சுநாதனை கைது செய்து  சிறையில் அடைத்தனர்.