Asianet News TamilAsianet News Tamil

பஸ்சில் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட பிளஸ் 2 ஜோடிகள்… அட்வைஸ் பண்ணிய ஆசிரியரை கேவலப்படுத்திய பெற்றோர்கள் !!

திருப்பூரில் பஸ்சில் மாணவர்களுடன் மாணவிகள் நெருங்கி பழகியதை தட்டிக்கேட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பெற்றோர் கண்டித்தனர்.  இதனால் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

school stdents in bus sex activities
Author
Tiruppur, First Published Dec 4, 2018, 7:38 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்  படிக்கும் பிளஸ்-2 மாணவிகள் 2 பேர்  நேற்று முன்தினம்  அரசு பஸ்சில் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு உள்ளனர். காலை நேர பஸ் என்பதால் அதில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே போல் மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும் அதில் பயணம் செய்தனர்.
school stdents in bus sex activities
பேருந்து  பயணத்தின் போது பிளஸ்-2 மாணவிகள் 2 பேர், வேறு ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து பஸ்சில் மிக நெருக்கமாக இருந்தனர். இது பஸ்சில் பயணம் செய்த பயணிகளை முகம் சுளிக்க வைத்தது.

தங்கள் பள்ளி சீருடை, பேட்ஜ் அணிந்து பிளஸ்-2 படிக்கும் 2 மாணவிகள் நடந்து கொண்ட விதம் சக மாணவிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் தங்கள் பள்ளியின் மானம் பறி போய் விடுமே என்று மாணவிகள் இந்த சம்பவத்தை பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.
school stdents in bus sex activities
இதையடுத்து அந்த பள்ளியின்  தலைமை ஆசிரியர், அந்த 2 மாணவிகளையும் தனது அறைக்கு அழைத்து விசாரித்தார். பின்னர் அவர்கள் 2 பேரிடமும் நாளைக்கு பள்ளிக்கு வரும் போது பெற்றோரை அழைத்து வரும்படி கூறி அனுப்பினார்.

மறுநாள் பள்ளிக்கு வந்த 2 மாணவிகளின் பெற்றோரும், தலைமை ஆசிரியரை சந்தித்து தங்களை பள்ளிக்கு அழைத்ததன் காரணம் குறித்து கேட்டனர். அப்போது தலைமை ஆசிரியர், பள்ளி மாணவிகளின் செயலால் தங்கள் பள்ளி பற்றி மக்கள் மத்தியில் தவறான எண்ணம் ஏற்பட்டு விடும். எனவே மகளை கண்டித்து வையுங்கள் என தெரிவித்துள்ளார்.

school stdents in bus sex activities
இதை கேட்டதும் அந்த மாணவிகளின் பெற்றோர் ஆத்திரம் அடைந்து, எங்கள் மகளை பற்றி எங்களுக்கு தெரியும். அவர்கள் மாணவர்களுடன் ஒட்டுவார்கள், உரசுவார்கள். அவர்கள் மடியில் கூட உட்கார்ந்து வருவார்கள். அதைப்பற்றி நீங்கள் பேச வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் வேலையை மட்டும் பாருங்கள் என்று கூறி விட்டு வேகமாக சென்று விட்டனர்.

இதை கேட்டு வாயடைத்து போய் நின்ற தலைமை ஆசிரியருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெற்றோர்களின் இந்த வார்த்தைகள் மற்ற ஆசிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மாணவர்களை அடிக்கக்கூடாது. திட்டக்கூடாது என்று ஆசிரியர்களின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ள நிலையில், இது போன்ற சில பெற்றோர்களின் செயலால் ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமே என்று பணியாற்றி வரும் பல சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த செயல் அவர்கள் மனதை மாற்றி விடுமோ? என்று அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios