வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை வீடு புகுந்து கதற கதற பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சித்தூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பெற்றோர் வெளியில் சென்றுவிட்டதால் வீட்டில் தனியாக மாணவி இருந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த திருமணமான வாலிபர் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டார்.

இதையும் படிங்க;- பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..!

இந்த நேரத்தில் மாணவியின் சகோதரரின் நண்பர் என்று கூறிக்கொண்டு இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். அப்போது, அந்த இளைஞர் ரொம்ப தாகமாக இருக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். மாணவி, தண்ணீர் எடுக்க சமையல் அறைக்கு சென்றார். அப்போது, வீட்டின் கதவை தாழ்பாள் போட்டுக்கொண்டு மாணவி கூச்சலிட்டும் விடாமல் கதற கதற பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், யாரும் வருவதற்குள் அங்கிருந்து தப்பித்சென்றார். 

இதையும் படிங்க;- நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு

இதனையடுத்து பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவம் பற்றி மாணவி கதறியபடி கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து பிளஸ்-2 மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.