சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் வணிக வளாகம் கட்டிடத்தில் அப்பகுதியை சேர்ந்த அங்கப்பன்(85) என்கிற முதியவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2ம் தேதி அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அவரது சட்டையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறான். அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் முதியவர் கொல்லப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த காவலர்கள் அங்கப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்த காவலர்கள் பேருந்து நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருக்கிறது. அதேபோன்று 3ம் தேதி சேலம் பகுதியில் டயர் கடை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு முதியவரின் தலையில் கல்லை போட்டு மர்ம நபர் கொலை செய்திருக்கிறார். இதுதொடர்பான காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

ரவுடியின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த திமுக பிரமுகர்..! சரமாரியாக வெட்டிப்படுகொலை..!

சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த உருவத்தை வைத்து காவலர்கள் கொலையாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தேரியூரைச் சேர்ந்த ஆண்டிச்சாமி என்பதும், கஞ்சா போதையில் இரவு நேரங்களில் பிச்சைக்காரர்களிடம் காசு பிடிங்கி வந்ததும் தெரிய வந்தது. அவ்வாறான சம்பவத்தில் தன் முதியவர்களை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.